மிருதுவான மற்றும் சுவையான பிஸ்கட்களை சாப்பிட விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். டீ, காபியுடன் சேர்த்து பிஸ்கட் சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அத்தகைய பிஸ்கட்டின் சந்தை மதிப்பு என்பது பல ஆயிரம் கோடிகள். காலம் மாறும்போது பிஸ்கட்டுகளும் பல சுவை பரிமாணங்களை பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் : விஞ்ஞானிகள்


குழந்தைகளுக்கு பிடித்தமான பிஸ்டகட், நீரிழிவு நோயாளிகளுக்கான பிஸ்கட் என பல வெரைட்டிகள் வந்துவிட்டன. ஆனால், எத்தனை பிஸ்கட்டுகள் வந்தாலும், அவற்றில் துளைகள் இருப்பதை நீங்கள் கட்டாயம் பார்த்திருக்க முடியும். அது ஏன்? என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. அழுகுக்காக வடிவமைக்கப்பட்டது என நீங்கள் நினைத்தால் அது தவறு. பிஸ்கட்டுகளுக்கு நடுவே ஓட்டைகள் அமைக்கப்படுவதற்கு பின்னால் அறிவியலும் இருக்கிறது. 


மேலும் படிக்க | KIWI Benefits: டஃபான 5 நோய்களுக்கு டஃப் பைட் கொடுக்கும் கிவி! இது பழங்களின் கிங்!!


பிஸ்கட்டின் துளைகள் டாக்கர்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த துளைகள் ஏன் ஏற்படுத்தப்படுகிறது என்றால் பேக்கிங்கின்போது காற்று செல்வதற்காக. பிஸ்கட் உருவாக்கப்படும்போது வெப்பத்தில் அதன் அளவு மாறாமல் இருப்பதற்கும் இந்த துளைகள் காரணமாகின்றன. ஒருவேளை ஓட்டைகள் இல்லாமல் பிஸ்கட் செய்ய முற்பட்டால், அவை சரியான வடிவமைப்பில் உங்களுக்கு கிடைக்காது அல்லது உடைய வாய்ப்பிருக்கிறது. அதிகமான பிஸ்கட்டுகள் ஒரே சூட்டில் வைத்து பேக்கிங் செய்யப்படும்போது, அதில் இருக்கும் காற்று முறையாக வெளியேறிவிட்டால், பிஸ்கட் அளவு மாறாலும், உடையாமலும் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பிஸ்கட்டில் இருக்கும் சூடு வெளியேறுவதற்காகவே அந்த துளைகள் இடப்படுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR