கொரோனா பரிசோதனையில் இந்தியாவின் `FELUDA` ஒரு Game Changer ஆக இருக்குமா..!!!
இந்தியாவின் `ஃபெலுடா` விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது கொரோனா பரிசோதனையின் நேரத்தையும் செலவையும் பெரிய அளவில் குறைக்கும் என நம்பப்படுகிறது.
கொரோனாவிற்கு எதிராக இந்தியா நடத்தும் போரில், இந்தியாவிற்கு வலுசேர்க்கும் வகையில், இந்திய விஞ்ஞானிகள் காகித அடிப்படையிலான டெஸ்ட் ஸ்ட்ரிப் ஃபெலுடாவை உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் 'ஃபெலுடா' விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது கொரோனா பரிசோதனையின் நேரத்தையும் செலவையும் பெரிய அளவில் குறைக்கும் என நம்பப்படுகிறது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Drugs Controller General of India) கடந்த மாதம் நடத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தர அளவுகோல் பரிசோதனைக்கு, பின்னர் ஃபெலுடா (FnCas9 Editor Linked Uniform Detection Assay -FELUDA ) என்னும் கொரோனா பரிசோதைக்கான பேப்பர் ஸ்ட்ரிப்பிற்கு ஒப்புதல் அளித்தது. பெலூடா விரைவில் சந்தையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சில காலத்திற்கு முன்பு கூறினார்.
இதை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) இளம் விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளது. FELUDA மூலம் நடத்தும் பரிசோதனையில், சோதனை முடிவுகளை சில நிமிடங்களில் பெறலாம். தற்போதைய RT-PCR கிட் மூலம் நடத்தப்படும் சோதனையில் இதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும். CSIR-ன் தலைமை இயக்குநர் சேகர் சி மண்டே கூறுகையில், ஃபெலுடா மூலம் நடத்தப்பட பரிசோதனையில் பரிசோதனை முடிவை 30 நிமிடங்களீல் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். மேலும், ஃபெலுடா பரிசோதனை கிட் என்பது RT-PCR டெஸ்ட் கிட்டை விட மூன்று முதல் ஐந்து மடங்கு மலிவானது.
ALSO READ | ஆரோக்கியமான இளைஞர்களுக்கு 2022 வரை கோவிட் தடுப்பூசி கிடைக்காமல் போகலாம்: WHO
COVID-19 சோதனைக்காக உருவாக்கப்பட்ட ஃபெலுடா கிட் என்பது, கர்ப்பம் உள்ளதா என்பதை மிக எளிதாக சோதிக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் பரிசோதனைக்கு ஒத்ததாகும். இட்தனை யாரும் எளிதாக பய்னபடுத்தலாம். இந்த கிட் உதவியுடன் கிராமங்கள் போன்ற அதிக வசதிகள் இல்லாத இடத்தில் கூட எளிதில் சோதிக்க முடியும். ஏனெனில், ஆர்டி பி.சி.ஆர் கிட் பரிசோதனைக்கு ஏராளமான சாதனங்கள் தேவைப்படுகின்றன. ஃபெலூடாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது குறுகிய காலத்தில் துல்லியமான முடிவுகளைத் தருகிறது.
மூத்த விஞ்ஞானி டாக்டர் டெபோஜோதி சக்ரவர்த்தி கூறுகையில், இந்த பேப்பர் ஸ்ட்ரிப்பில், Cas9 புரதம் பார்கோடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் நோயாளியின் மரபணு பொருளில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இந்த காகித ஸ்ட்ரிப்பில் இரண்டு கோடுகள் உள்ளன, அவை சம்பந்தப்பட்ட நபருக்கு COVID-19 உள்ளதா என்பதை எடுத்துரைக்கிறது என்றார்.
ALSO READ | IRCTC: ரயில் பயணத்தில் இந்த தவறுகள் செய்தால், கம்பி எண்ண வேண்டியிருக்கும்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe