உறக்கம் என்பது சிலருக்கு வரப்பிரசாதம், காரணம் அது எளிதில் அவர்களுக்கு வந்து விடுவதில்லை. உறக்கத்தினை பெற அவர்கள் மெனக்கிட வேண்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அந்த கவலை இனி இல்லை.... வெறும் 2 நிமிடங்களில் உறக்கத்தினை வரவைப்பது எப்படி என்பது குறித்து Relax and Win: Championship Performance என்னும் ஆங்கில புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த உறக்க யுக்திகளை பயன்படுத்திய தான் அமெரிக்க ராணுவ வீரர்கள் கடுமையான போர் தருணத்தின் போதும் நிம்மதியாக உறங்கினர் என இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்களத்தில் இருக்கும் போராளிகளுக்கு உறக்கம் என்பது சில நேரங்களில் எட்டா கனி தான்... 


ஆனால் பின்வரும் யுக்திகளை பயன்படுத்தினால் இந்த உறக்கத்தினை பெற பிரச்சனைகள் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்படி என்ன யுக்தி அது?....


  • படி 1: கண்களை சுற்றிலும் மொதுவாக கையால் ஒத்திடம் கொடுக்க வேண்டும்.

  • படி 2: மூச்சுப் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும், நீண்ட பெருமூச்சினை இழுத்து விட்ட தங்களது இதய தசைகளுக்கு சற்று ஓய்வு அளிக்க வேண்டும்.

  • படி 3: புத்துணர்ச்சியான காட்சிகள் மூலம் மூலையை இருக்கும் கலைப்புகளை போக்க வேண்டும்., அதாவது பசுமையான காட்சிகளை பார்த்து தாங்கள் வேறொரு உலகத்தில் இருப்பது போல் உணர வேண்டும். இல்லையேல் "நான் ஏதும் நினைக்கவில்லை", "நான் ஏதும் நினைக்கவில்லை", "நான் ஏதும் நினைக்கவில்லை" என பத்து முறை தொடர்ந்து சொல்லிக்கொண்டு மனதை ஒருநிலை படுத்தலாம்.


உறக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய காரணி ஆகும். போதுமான உறக்கம் இல்லா பட்சத்தில் உடல் சோர்வு ஏற்பட்டு அது உடல் ஆரோக்கியத்தினையே குறைத்துவிடும்.


உறக்க குறைப்பாட்டினால் எற்படும் இன்சோமேனியா என்னும் நோய் 3-ல் ஒரு பெண்மனியை அவர்களது 30-லிருந்து 40-வயதுகளில் தாக்குகிறது என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.


உறக்கத்திற்கு தேவையான போதிய காலத்தினை நாம் ஒதுகாதபட்சத்தில் அது மனஅழுத்தம், உலைச்சல், உடல் சோர்வு, அஜீரனம் என பல உவாதைகளை நம்முள் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.