இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களினால் பாலியல் பிரச்சனைகளால் பலர் மண வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பதை காண முடிகிறது. இதனை சமாளிக்க வயாக்ரா போன்ற விலை உயர்ந்த மருந்துகளையும் சிகிச்சைகளையும் நாடுகிறார்கள். இதன் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, பல பக்க விளைவுகளை கூடவே கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்க இயற்கை வைத்தியத்தை அல்லது வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பது மிகவும் சிறந்தது. இதற்கு மாதுளை பெரிதும் கை கொடுக்கும். தினமும் மாதுளை சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கலாம். ஆனால், அதற்கு மாதுளையை எப்போது, ​​எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். எனவே மாதுளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். அதனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியம். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது . இது கருவுறுதல் மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே உங்கள் மண வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்


வளமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், கொழுப்பு சத்து அதிகம் இல்லாதா ஆரோக்கிய உனவுகள் எடுத்துக் கொள்வதால் உங்களின் பாலியல் உடலமைப்பு சீராக செயல்படும். மாதுளையை தவிர, பிற பழங்கள் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பை கொண்ட பாலை எடுத்துக் கொள்ளவது தீர்வு விரைவில் கிடைக்க உதவும்


இது தவிர இஞ்சியையும் சாப்பிடலாம். உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் சக்தி இதற்கு இருப்பதால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் உடலில் பாலுணர்வை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அவசியமான ஹார்மோன் ஆகும். இது தவிர, பச்சை வெங்காயமும் நன்மை பயக்கும். இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வயாகராவை தேடி போகும் நிலை ஏற்படாது. 


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR