Corona Vaccine: கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற 3வது டோஸ் தடுப்பூசி அவசியம்! திடுக்கிடும் தகவல்
கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என்ற திடுக்கிடும் தகவல் பல்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு கோவிட் நோய்க்கு எதிரான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசியே போதும் என்று சொல்லிவந்த நிலையில் தற்போது, மூன்றாவது டோஸ் போடுவது தான் பாதுகாப்பு என்ற தகவல்கள் வெளியாவது பல கேள்விகளை எழுப்புகிறது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்து இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) தலைவர் சைரஸ் பூனாவாலா என்ன சொல்கிறார்? தெரிந்துக் கொள்வோம். கோவிட் -19 இன் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலப்பது மிகவும் ஆபத்தான முடிவு, அதை ஊக்குவிக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய பூனாவவாலா, "தடுப்பூசிகளை கலந்து போடும் முடிவுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இரு வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போட்ட பிறகு, முடிவுகள் சரியாக இல்லை என்றால் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டுவார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும், இருவேறு தடுப்பூசிகளை கலப்பதற்கு, தடுப்பூசி அதிகார முகமை (vaccine authority) ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது. ஏனென்றால் அது மிகவும் ஆபத்தானது, அதுமட்டுமல்ல, அது நேரத்தை வீணடிக்கும் வீண் வேலை”.
Also Read | 3rd Dose of Corona Vaccine: மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவை?
தடுப்பூசிகள் மனிதர்களுக்கு நன்றாக வேலை செய்யும் போது நாம் ஏன் அதை கலந்து சிக்கல்களை ஏற்படுத்த வேண்டும்? இந்த விஷயத்தை நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய பூனாவாலா, கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை நீட்டித்தது தொடர்பாக மத்திய அரசை அவர் விமர்சித்தார்.
"பொதுவாக கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட இரண்டு முதல் மூன்று மாத காலத்திற்குள் இரண்டாவது டோஸ் எடுக்கப்பட வேண்டும். தயாரிப்பு கிடைக்காதபோது, இரண்டாவது டோஸை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம் என்று அரசாங்கம் ஒரு தீர்வைக் காண்கிறது. இரண்டு அளவுகளுக்கும் இடையில் இரண்டு மாத இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும் என்று பூனாவாலா கூறினார்.
பூஸ்டர் டோஸ் பற்றி செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) தலைவர் சைரஸ் பூனாவாலா, "இரண்டாவது டோஸை எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அனைவரும் மூன்றாவது டோஸை எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் அதன்பிறகு உடலில் உள்ள ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…
மூன்றாவது டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை தான் எடுத்துவிட்டதாக தெரிவித்த அவர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பணிபுரியும் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை கொடுத்துவிட்டதாகவும் பூனாவாலா தெரிவித்தார்.
அப்படியென்றால், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என்பது பல்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறது. இன்னும் சில வாரங்களில் இது மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பப்போகிறது என்றே தோன்றுகிறது.
Also Read | Covaxin: WHO அங்கீகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR