ICMR: கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்

கடந்த 100 ஆண்டுகளாக காசநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசி கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 11, 2021, 05:37 PM IST
  • காசநோய் தடுப்பூசியின் நீடித்த பாதுகாப்பு
  • கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்கவும் பிசிஜி பயன்படலாம்
  • ICMR ஆய்வில் அருமையான செய்தி
ICMR: கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்  title=

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அதற்கு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கோடிக் கணக்கானவர்கள் தடுப்பூசி பாதுகாப்பை பெற்று வருகின்றனர். 

இருந்தபோதிலும், கொரோனாவுக்கான மருந்துகள், தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், மருத்துவ சஞ்சிகைகளில் வெளியாகின்றன. சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு வெளியிட்டிருக்கும் தகவல் சற்று ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

கடந்த 100 ஆண்டுகளாக காசநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசி (BCG vaccination), வயதானவர்களுக்கு கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) தெரிவித்துள்ளது. ரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பு உயிரணுக்கள் வீங்குவதைத் தடுக்கும் மருந்தாக BCG செயல்படக்கூடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Also Read | COVID Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி எப்போது? வெளியானது முக்கிய தகவல்

ஆய்வின் படி, Bacillus Calmette-Guerin (BCG) உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 130 மில்லியன் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

முதியோர்களுக்கு, குறிப்பாக அதிக கோவிட் பாதிப்பு உள்ள நாடுகளில், பிசிஜி தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் மேம்பட்டுள்ளது. முந்தைய ஆய்வுகளின்படி, வைரஸ் தொற்றுகள் சம்பந்தப்பட்ட சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் BCG தடுப்பூசி பாதுகாப்பை அளிக்கலாம்.

சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பு உயிரணுக்கள் வீங்குவதைத் தடுக்கும் மருந்தாக BCG செயல்படக்கூடும். 
மேலும், சமீபத்திய பிசிஜி தடுப்பூசி அதிகமாக வீங்கும் விஷயத்துக்கு (hyperinflammation) தொடர்புடையது அல்ல, ஆனால் 18 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு அழற்சி நோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பளிக்கலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு சைட்டோகைன்களை பிசிஜி தடுப்பூசி ஏற்படுத்தியது.மேலும், IL-10 மற்றும் IL33 உள்ளிட்ட எதிர்ப்பு அழற்சி எதிர்வினைகளும் குறைந்தன. தற்போதைய ஆய்வின்படி, BCG தடுப்பூசியின் விளைவு பாதுகாப்பானது என்பதை வலியுறுத்துகிறது மற்றும் எல்டரில் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்காது என்று ICMR ஆய்வு கூறுகிறது.

Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News