Intermittent Fasting பெண்களுக்கு ஆபத்தானது: ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை
Intermittent Fasting: உடல் பருமனை குறைக்க, பெண்கள் பலவிதமான வைத்தியங்களை மேற்கொள்கிறார்கள். பல வகையான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை.
உடல் எடை அதிகரிப்பதால், நமது உடலின் ஃபிட்னஸ் கெட்டுப்பொவதுடன் நாம் பல நொய்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. அதிகரித்து வரும் உடல் பருமனை கட்டுப்படுத்த பெண்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உடல் பருமனை குறைக்க, பெண்கள் பலவிதமான ஆயுர்வேத வைத்தியங்களையும் மேற்கொள்கிறார்கள். பல வகையான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள், ஆனால் பெரும்பாலான பெண்களால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை. ஆண்களை விட பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள். அதேபோல், ஆண்களை விட பெண்களே உடல் எடையை குறைக்க அதிக முயற்சிகளையும் எடுக்கிறார்கள். பெண்கள், உடல் எடையை குறைக்க இண்டர்மிடண்ட் ஃபாஸ்டிங், அதாவது குறிப்பிட்ட இடைவெளியில், எதையும் சாப்பிடாமல் பட்டினி இருக்கும் முறையை பின்பற்றுகிறார்கள்.
இந்த விதமான ஃபாஸ்டிங்கில், உடல் எடையை குறைப்பதில் எந்த பலவீனமும் இருக்காது என்று பெண்கள் நம்புகிறார்கள். இன்டர்மிடென்ட் பாஸ்டிங் எடை இழப்புக்கு சிறந்த வழி என்பது உண்மைதான், ஆனால் இந்த எடை இழப்பு முறை பெண்களின் கருவுறுதலை பாதிக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. உடல் பருமன் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதில், இன்டர்மிடென்ட் பாஸ்டிங்கால், பெண்களின் கருவுறும் தன்மைக்கான ஹார்மோனில் தாக்கம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எடை இழப்புக்கான இந்த முறை கருவுறுதலை பாதிக்கிறது:
சமீபத்தில், சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமன் குறித்த ஆய்வை வெளியிட்டனர். அதில் உடல் எடையை குறைக்கும் இந்த இன்டர்மிடென்ட் பாஸ்டிங் முறை பெண்களின் குழந்தையின்மை பிரச்சனையை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. இன்டர்மிடென்ட் பாஸ்டிங் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இங்கே காணலாம்.
மேலும் படிக்க | உடல் எடையை துரிதமாக குறைக்க வழி! தினமும் 16 மணி நேர பட்டினி இருக்க முடியுமா?
ஆராய்ச்சி வெளிப்படுத்தியது என்ன?
இன்டர்மிடென்ட் பாஸ்டிங், எடை இழப்புக்கான நிரூபிக்கப்பட்ட மற்றும் வெற்றிகரமான சூத்திரம் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் இது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மீது ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் சில பெண்கள் மாதவிடாய் நின்ற நிலையில், அதாவது மெனோபாசிலும், சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயிலும் இருந்தனர்.
இந்த பெண்கள் 8 வாரங்கள் இன்டர்மிடென்ட் பாஸ்டிங்கை மேற்கொண்டனர். இதில் சில பெண்கள் வாரியர் டயட்டில் இருந்தனர், சிலர் இன்டர்மிடென்ட் பாஸ்டிங்கில் இருந்தனர். வாரியர் டயட்டில் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும், ஆனால், இதில் கலோரிகள் கணக்கிடப்படாது. அதன் பிறகு இதில், ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் பட்டினி இருக்க வேண்டும்.
இந்த பெண்களின் ஹார்மோன் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். 8 வாரங்களுக்குப் பிறகு, இரண்டு வழிகளிலும் ஃபாஸ்டிங் இருந்த பெண்களின் குளோபுலின் ஹார்மோனில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்தது. இது இனப்பெருக்க ஹார்மோன்களை கடத்தும் ஒரு புரதம் ஆகும். எனினும், மாதவிடாய் நின்ற மற்றும் மாதவிடாய் நிற்காத பெண்களுக்கு கருவுறுதல் ஹார்மோனான டீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டிரோன் அளவு 15 சதவீதம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetes: இந்த பழக்கங்களை காலையில் வழக்கப்படுத்தினால் ரத்த சர்க்கரை அளவு சீராகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ