Diabetes: இந்த பழக்கங்களை காலையில் வழக்கப்படுத்தினால் ரத்த சர்க்கரை அளவு சீராகும்

Diabetes vs Habits: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இந்த 5 பழக்கங்களை காலையில் மறக்காமல் செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2022, 10:58 AM IST
Diabetes: இந்த பழக்கங்களை காலையில் வழக்கப்படுத்தினால் ரத்த சர்க்கரை அளவு சீராகும் title=

புதுடெல்லி: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இந்த 5 பழக்கங்களை காலையில் மறக்காமல் செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், பல நோய்களைத் தவிர்க்கலாம். வாழ்க்கை முறையை சரியாக சீரமைத்துக் கொள்ளாவிட்டால், பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் ஆபத்தானவை. நோய்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். சமநிலையற்ற வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே ஆரோக்கியம் சீராகும்.  

தேவையற்ற பழக்கங்களால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, இதன் காரணமாக பிரச்சினைகள் தொடங்குகின்றன. திடீர் எடை இழப்பு, அதிக தாகம், திடீரென பசியின்மை, சிறுநீர் வாசனை, மங்கலான பார்வை மற்றும் எப்போதும் சோர்வாக உணர்வது உட்பட பல அறிகுறிகள் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தெரிந்துக் கொள்ளலாம். 

சர்க்கரை நோயால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த 5 பழக்கங்களை காலையில் செய்தால் போதும்...

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

தண்ணீர்
உடலில் தண்ணீர் தேவையான அளவு இருந்தால், பல பிரச்சனைகள் ஏற்படாமலேயே தவிர்த்துவிடலாம். ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சமநிலையை பராமரிக்க தண்ணீர் உதவுகிறது. இது, இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் உடலில் உள்ள நீரின் அளவு பராமரிக்கப்படும்.  

காலை உணவில் புரதம்

புரோட்டீன், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்து ஆகும். காலை உணவில் புரோட்டீனை சேர்த்துக் கொள்வது நல்லது. நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க புரதச்சத்து கொண்ட உணவு உதவியாக இருக்கும். காலை உணவை தவறாமல் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பதை தவிக்கவும்.

கூடுதல் காஃபின் தவிர்க்கவும்
காபி உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே, காபியை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். காபியில் காஃபின் உள்ளது மற்றும் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. குடித்தாலும் குறைவான அளவு மட்டுமே குடிக்கவும்.

மேலும் படிக்க | கொசுவுக்கு உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா?

காலையில் உடற்பயிற்சி 
காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்து நடைப்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யும் போது, ​​இரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது.

மன அழுத்தத்திற்கு விடை கொடுங்கள்
மனஅழுத்தம் என்பது பல நோய்களை நமக்குத் தரும். எனவே மன அழுத்தத்தை தவிர்க்கவும். காலையில் எழுந்தவுடனே தேவையில்லாதவற்றை யோசித்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், அன்றைய தினம் சரியாக போகாது என்பதுடன், இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும். அமைதி மற்றும் பொறுமையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நடைபயிற்சி செய்யவும். உடற்பயிற்சி செய்யவும், யோகா செய்யவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News