பெண்கள் இரவில் ப்ரா அணிந்து உறங்குவது சரியா?  நம் நாட்டில் பெண்கள் பல துறைகளில் தடம் பதித்தாலும், இன்னும் குழப்பத்துடன் காணப்படுகிற ஒரு துறை உள்ளது. அவர்கள் தங்களது உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் மிகவும் குழப்பமாக இருப்பதாகத் தெரிகிறது. இரவில் ப்ரா அணிந்து தூங்குவது சரியா அல்லது அதை கழற்றி வைத்துவிட்டு தூங்க வேண்டுமா என்ற குழப்பம் பல பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இந்த கேள்வி உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவில் அதற்கான விடையை காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவில் ப்ரா அணிந்து தூங்கலாமா?


பெண்கள் இரவில் ப்ராவை அணிந்துகொண்டு தூங்கினாலும், அணியாமல் தூங்கினாலும், அதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். ப்ராவை கழற்றிவைத்து விட்டு தூங்குவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது அல்லது அதிகரிக்கிறது என்று இதுவரை எந்த ஆராய்ச்சியில் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகையால், உங்கள் வசதிக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம். இருப்பினும், நீங்கள் இரவில் ப்ரா அணிந்து தூங்கினால், சரியான அளவிலான ப்ராவை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


ப்ரா வாங்கும் போது கவனமாக இருங்கள்


சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் ப்ரா மார்பகத்தின் மீது சரியாக பொருந்தவில்லை என்றால், அதன் காரணமாக நீங்கள் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். எனவே, ப்ராவை வாங்கும் போது, ​​அதன் துணி, அளவு மற்றும் உங்கள் உடலின் அமைப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சரியான ப்ராவை வாங்குவது உங்கள் ஆளுமையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


மேலும் படிக்க | தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்


இந்த சூழ்நிலைகளில் ப்ரா அணிய வேண்டாம்


உங்கள் மார்பகம் வீங்கியிருந்தால் அல்லது முலைக்காம்பில் சீழ் இருந்தால், சில நாட்களுக்கு நீங்கள் ப்ரா அணியக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த சந்தர்ப்பங்களில் ப்ரா அணிந்தால், தொற்று மேலும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக உங்கள் வலியும் அதிகரிக்கும். உங்கள் அசௌகரியம் குணமானதும், நீங்கள் மீண்டும் ப்ரா அணியலாம். அதன் பிறகு எந்த வித பிரச்சனையும் இருக்காது.


எப்படிப்பட்ட ப்ராக்களை வாங்க வேண்டும்?


முடிந்த வரை காட்டன் ப்ராக்களை அணிவது நல்லது. வியர்வையை வெளியேற்றும் மிருதுவான துணியாலான ப்ராக்களை அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மேலும், மார்பக பகுதி மென்மையான பகுதி என்பதால், ப்ராவில் அதிக, கனமான வடிவமைப்புகளோ, வேலைப்பாடுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றின் தாக்கம் மார்பகத்தின் மீது பட்டால், அதனால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.


பல நேரங்களில் பெண்கள் பேட் செய்யப்பட்ட ப்ரா (பேடட் ப்ரா) அணிவதால் முலைக்காம்பில் பிரச்சனை ஏற்படுகிறது. முலைக்காம்புகளின் தோல் மிகவும் மிருதுவானது. பிராவில் உள்ள பேட் அதை அழுத்தினால், அது வறண்டு, அரிப்பு தொடங்குகிறது. ஆகையால் பேடட் பிரா வாங்குமோது மிக கவனமாக பார்த்து வாங்குவது நல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Health Alert: இவற்றை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ