மைதா மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், அது ஆரோக்கியமான உணவு என்று கூற முடியாது. ஏனென்றால் கோதுமையில் இருந்து உமியை நீக்கிவிட்டு தவிடுடன் தயாரிக்கப்படும் மாவு கோதுமை மாவு. தவிடு நீக்கிய கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா. அதனால் கோதுமையை போல், முக்கியமானது கிடையாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைதா என்றதும் நம் மனதில் முதலில் தோன்றுவது பரோட்டா தான். ஆனால் பரோட்டா மட்டுமல்லாமல் நமது அன்றாட உணவுகளில் மைதா நீக்கமற நிறைந்துள்ளது. வெள்ளை பிரட், பீசா, நூடுல்ஸ், பாஸ்தா, கேக்குகள், நம் அன்றாடம் சாப்பிடும் பல பிஸ்கட் வகைகள் மை தான் நிரம்பியுள்ளது. அதோடு பாதுஷா, குலாப் ஜாமுன், மைதா கேக் போன்ற இனிப்பு வகைகள் பல மைதா மாவில் தயாரிக்கப்படுகின்றன.


சத்துக்கள் இல்லை என்றாலும் சுவையாக இருப்பதால், அதை நம்மில் பலர் விரும்பி உண்கின்றனர். ஆனால் மைதா மாவில் குளூட்டன் என்னும் புரதம் உள்ளதால், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் (Side Effects of Maida Foods) பாதிக்கப்படும். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. ஏனெனில் மைதா மாவில் இருப்பது கலோரிகள் மட்டுமே. மேலும் உள்ள நார் சத்துக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. ஊட்டச்சத்துக்கள் எதுவும் அதில் இல்லை. 


மைதா உணவுகளை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவதால், பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் மைதா உணவுகளை வழக்கமாக்கி கொண்டால் ஆரோக்கியம் (Health Tips) பெரிதும் பாதிக்கப்படும். உடலை சல்லடையாக்கி, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சும் மைதாவை தவிர்க்க முடியவில்லை என்றாலும் அளவோடு உண்பது நல்லது.


நீரழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும் மைதா உணவுகள்


மைதா உணவுகளை அளவிற்கு அதிகமாகக் கொள்வதும், வழக்கமாக உட்கொள்வதும், சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். கிளைசிமி குறியீடு அதிகம் கொண்ட மைதா மாவு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மைதா உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!


எலும்புகளை பலவீனமாக்கும் மைதா உணவுகள்


மைதா மாவில் சொத்து பெயரளவில் உள்ளது. எனவே இதனை உட்கொள்வதால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். மேலும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனப்படுத்தும் மைதாவை, அளவிற்க்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, ஆஸ்டியோ புரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எலும்புகள் பலவீனம் அடைவதால் அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைதா


மைதா மாவில் நார்ச்சத்து இல்லை என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. செரிமான ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும். குடலில் ஒட்டிக்கொண்டு பிரச்சனைகளை உண்டாக்கும் மைதாவை அடிக்கடி சேர்ப்பதால், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் மைதா உணவுகள்


மைதா மாவில் தயாரித்த உணவுகளை, அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. ஏனெனில் இது மாவுச்சத்து நிறைந்தது. கலோரிகளும் அதிகம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். எனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க, மைதா மாவு செய்த உணவுகளை அளவோடு சாப்பிடுவது நல்லது.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ