நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!

Published: Jul 20, 2024, 11:45 AM IST|Updated: Jul 20, 2024, 11:59 AM IST

நரம்பு மண்டலம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உடலில் தேவையான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருப்பது அவசியம். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது வைட்டமின் பி12. இந்நிலையில், இதன் குறைபாட்டினை உணர்த்தும் அறிகுறிகள், அதனை தவிர்க்க டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல விதமான ஊட்டசத்துக்கள் அவசியம். உடல் ஆரோக்கியமாக நமக்கு மிகவும் உதவியாக இருக்கும், முக்கிய ஊட்டசத்துக்களின் ஒன்று வைட்டமின் பி12. இதன் குறைபாட்டை அலட்சியப்படுத்தக் கூடாது. இதனால், பல தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

vitamin b12 deficiency1/10

வைட்டமின் பி12 குறைபாடு

வைட்டமின் பி12 குறைபாடு, பல உடல் நல பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விடலாம். அதில் முக்கியமானது நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் மூளை ஆரோக்கிய பாதிப்பு. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் அதிதியாவசிய ஊட்டசத்தான வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகளையும், அதனை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

vitamin b12 deficiency symptoms2/10

வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்

வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள்: கவனம் செலுத்துவதில் சிக்கல், எந்த வித காரணமும் இல்லாமல் அடிக்கடி சோர்வாக உணர்தல், ஞாபக மறதி, கால்களில் உணர்வின்மை, பார்வை குறைபாடு, பலவீனம், இரத்த சோகை, அடிக்கடி தலைவலி மயக்கம் வாந்தி முதலியன ஏற்படுதல் ஆகியவை வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்

 

Vitamin b12 foods3/10

வைட்டமின் பி12 உணவுகள்

 வைட்டமின் பி12 ஊட்டச்சத்து: மருத்துவ மொழியில், வைட்டமின் பி12 ஊட்டச்சத்து சயனோகோபாலமின் என அழைக்கப்படுகிறது. இந்த வைட்டமினை உடல் உற்பத்தி செய்யாது என்பதால், உணவின் மூலம் தான் இந்த வைட்டமின் சத்தை நாம் பெற முடியும்.

Mushroom4/10

காளான்

காளான்கள் வைட்டமின் பி12 நிறைந்தவை. வயதானவர்கள் பொதுவாக சந்திக்கும் நரம்பியகல் பிரச்சனைகளில் ஒன்றாக அல்சைமர் அல்லது ஞாபக மறதி குறைபாடு போன்ற பிரச்சனைகள் தவிர்க்க அன்றாட உணவில் காளானை உண்ணலாம்.இவற்றில் வைட்டமின் பி12 தவிர புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் ஆகிய சத்துக்களும் நிறந்துள்ளன.

Broccoli5/10

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி: ஆரோக்கியத்தின் களஞ்சியமாக விளங்கும் பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் பி12 உள்ளது. அதில் முக்கியமானது ப்ரோக்கோலி, வைட்டமின் பி12 -இன் சிறந்த ஆதாரமாக கருதப்படும் ப்ரோக்கலியில் வைட்டமின் பி9 என்னும் ஃபோலேட் சத்தும் அதிகமாக உள்ளது.

Milk6/10

பால்

பால், தயிர் ஆகியவற்றை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டை போக்கலாம். பசுவின் பாலில் வைட்டமின் பி12 இயற்கையாகவே போதுமான அளவு உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதனால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு நரம்பியல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதோடு, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பால் மேம்படுத்துகிறது.

சோயா பால்7/10

சோயா பால்

சோயா பால் அருந்துவதன் மூலம் வைட்டமின் பி 12 சத்து குறைபாட்டை தவிர்க்கலாம். பால் பொருட்களை உட்கொள்ளாதவர்களுக்கு அல்லது அலர்ஜி உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், காளான் பயனுள்ளதாக இருக்கும்.

 

முட்டை8/10

முட்டை

முட்டை: புரதத்தின் களஞ்சியமாக விளங்கும் முட்டையில் வைட்டமின் பி12 சத்தும் நிறைந்துள்ளது. இதனை வழக்கமாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி12 சத்தினை பெறலாம். நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்தவும், சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்கவும் உதவும் முட்டை தவறாமல் உங்கள் டயட்டில் இருக்கட்டும்.

Fish Food for Vitamin b12 deficiency9/10

மீன் உணவுகள்

மீன் உணவுகள்: அசைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க மீன் உணவுகள் வரப்பிரசாதம். மேலும், இவற்றில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். எலும்பு, இதயம், மூட்டு ஆரோக்கியம் என அனைத்திற்கும் மீன் உணவு அவசியம்.

 

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.