Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன
கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என உள்ள நிலையில், இந்தியாவில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் தவிர, ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும், போடப்பட்டு வருகிறது.
கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என உள்ள நிலையில், இந்தியாவில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் தவிர, ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும், போடப்பட்டு வருகிறது. இந்த மூன்று தடுப்பூசிகளில், கோவிஷீல்ட் தடுப்பூசியை பூனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வருகிறது.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவல்லா, இந்தியாவில் தனது நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மற்றொரு கோவிட் -19 தடுப்பூசியான கோவோவாக்ஸ் (COVOVAX) அக்டோபரில் அறிமுகமாகும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
"குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பெரும்பாலும் ஜனவரி-பிப்ரவரியில் தொடங்கப்படும். மேலும் பெரியவர்களுக்கு, DCGI ஒப்புதல்களைப் பொறுத்து அக்டோபரில் கோவோவாக்ஸ் கிடைக்கும்" என்று பூனாவல்லா கூறினார். மேலும், இது இரண்டு-டோஸ் தடுப்பூசியாக இருக்கும் எனவும் அறிமுகத்தின் போது விலை தீர்மானிக்கப்படும் என்றார்.
ALSO READ | Johnson & Johnson கொரோனா தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்..!!
ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடனான உரிம ஒப்பந்தத்தின் கீழ் SII நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் கோவிஷீல்டின் தற்போதைய உற்பத்தி திறன் மாதத்திற்கு 130 மில்லியன் டோஸ் என்று உள்ள நில்லையில், அதை மேலும் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று ஆதர் பூனவல்லா கூறினார். மேலும், பூனாவல்லா உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தார், இருவருக்கும் இடையிலான சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
சந்திப்பிற்கு பிறகு PTI நிறுவனத்திடம் பேசிய அவர் "அரசு எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. அனைத்து ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், ”என்று கூறினார்.
முன்னதாக, பூனாவல்லா சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் சந்தித்தார். பூனாவல்லாவுடன் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தியதாக மத்திய சுகாதார அமைச்சர் ட்வீட் செய்தார். COVID-19 தொற்று பரவலை கடுப்படுவதில், நிறுவனம் அளிக்கும் பங்கை நான் பாராட்டினேன். தடுப்பூசி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தேன்" என்று மாண்டவியா கூறினார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR