இன்றைய பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, பலர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். தவறான உணவு பழக்கம் காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சனைகள், சில நேரங்களில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கூட சென்று விடுகிறது. அதில் ஒன்று அசிடிட்டி பிரச்சனை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசிடிட்டி என்பது செரிமானம் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதனை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனென்றால், இதன் காரணமாக, பல சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பொதுவாக இரவில் தூங்கும் முன் அதிகமாக அல்லது ஹெவியான உணவை உண்ணும்போது  உண்டாகும் இந்த பிரச்சனை (Health Tips) உண்டாகும். அதே போன்று தாமதமாகச் சாப்பிடுவதும், தாமதமாகத் தூங்குவதும் இதற்கு காரணமாகும். ஆரோக்கியமற்ற உணவுகளை, நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவதும் அசிடிட்டி வாயு பிரச்சனைக்கு காரணமாகிறது.


வாயு பிரச்சனையை தவிர்க்க  சில எளிய வீட்டு வைத்தியங்கள்:


1. அசிடிட்டி பிரச்சினையிலிருந்து விடுபட, இஞ்சி மற்றும் புதினா சேர்த்த பானம் அருந்துவது பலன் கொடுக்கும். இதனால் வயிற்று வலியும் நொடியில் நீங்கும்.


2. காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் அமிலத்தன்மையைக் குறைக்கும். மேலும் வெறும் வயிற்றில் டீ அல்லது காபியை தவிர்க்கவும்.


3. உணவில் தயிர், மோர் போன்ற ப்ரோபயோடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது, அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.


மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும்... புரதம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்!


4. அசிடிட்டி  பிரச்சனையிலிருந்து விடுபட எலுமிச்சை உதவும். எலுமிச்சை இஞ்சி சேர்த்த பானம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.


5. செரிமானத்தையும் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. இதனால் ஓமம் நீர் அருந்துவது, வாயு தொல்லையில் இருந்து விடுபட உதவும்.


6. காலையில் எழுந்தவுடன் நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டால், அதை உடனே போக்க வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெற உதவும் வாழைப்பழம் 


காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர வாழைப்பழத்தை தயிர் அல்லது சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம். வாழைப்பழம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வயிற்று சுவர்களில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி,  அமிலத்தின் விளைவைக் குறைக்கிறது. மேலும், வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளத்தால் செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.


அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க செய்ய வேண்டியவை


அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க, தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரமாவது உணவு சாப்பிடுவது மிக அவசியம். இது உணவு செரிமானத்திற்கு போதுமான நேரத்தை வழங்குகிறது. மேலும், தூங்கும் முன் பசி எடுத்தால், கிச்சடி, கஞ்சி போன்ற லேசான உணவுகளை உண்ணுங்கள்.  சாப்பிட்ட உடன் சிறிது நேரம் நடப்பதும், அசிடிட்டி பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். எண்ணெயில் வறுத்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவதால் அசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | குழந்தை பெற முயற்சிக்கும் ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ