Bile: பித்தமா? கவலை வேண்டாம்! விடுபட சுலபமான தீர்வுகள் இதோ...
உடலில் பித்தம் அதிகமானால் வறட்சித்தன்மை அதிகரிக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு, இளநரை, மலச்சிக்கல் என பல பிரச்சனைகள் ஏற்படும். பித்தத்தை அளவாக வைத்துக் கொள்ள சுலபமான வழிமுறைகள்...
மனிதனின் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விதமான நாடிகள் உண்டு என்று சொல்கிறது சித்த வைத்தியம். உடலில் உள்ள பித்தபை வேலை செய்தால் தான் பசி ஏற்படும், சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகும். பித்தத்தை அக்னி, சூடு என்றும் சொல்கிறோம்.
உணவு உண்ணும்போது, உணவின் ரசத்தை பிரிப்பது கபம். அதை ரத்தத்தில் இருந்து சதைக்கு சேர்ப்பது பித்தம். குடலில் இருந்து காற்றை பிரிப்பது, கழிவு பொருளை வெளியேற்றுவது வாதம் என்றும் அறியப்படுகிறது.
கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கும் பித்தநீர் பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு செரிமானம் ஆகும். அதுவே பித்தம் அதிகமானால், உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு ஏற்படும். உடலில் வறட்சித்தன்மை அதிகரிக்கும். சருமம் கடினமாக மாற்றமடையும்.
பித்தம் அதிகரித்தால், இளநரை, மலச்சிக்கல், பசியின்மை, வாயு பிரச்சனை, உடல் மற்றும் கண் எரிச்சல் என பல சிக்கல்கள் ஏற்படும். அதோடு, நாக்கு வறண்டு போகும், வாயில் கசப்பு தன்மை இருக்கும்.
Also Read | பூவன்பழத்தின் அற்புத நன்மைகள்! யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது தெரியுமா?
இதுபோன்ற சூழ்நிலையில் பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொண்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாவதால், உடல் அதிகளவு பித்தத்தை சுரக்கச் செய்யும். அதனால் தான் அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகளை உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். எனவே, தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.
மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகரித்து பித்தம் அதிகரிக்கும். எனவே, மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிட்டால், பித்தமும் குறையும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
Read Also | சுயஇன்பம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? ஆய்வு சொல்வது என்ன?
அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது.
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும் என்பதால் உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. தேநீர், காப்பி போன்ற பானங்களை அருந்துவது சரி, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சாக மாறுமோ என்னமோ, ஆனால் பித்தமாக மாறிவிடும். எனவே தேநீர், காப்பி அருந்துவதற்கு ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு தூக்கம் இல்லை என்றாலும், உடல் சூடு அதிகரித்து பித்தம் அதிகரிக்கும். எனவே தினசரி போதிய அளவு தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிறு தலை வலி என்றால் கூட மருந்துகடைகளுக்கு தான் செல்கிறோம். அதை தவிர்த்து, நமது உணவு பழக்கங்களில் இருந்தே ஆரம்பக் கட்டத்திலேயே உடலை சரி செய்துக் கொள்ளலாம்.
Also Read | விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை லிட்டர் 4000 ரூபாய்!
பித்தத்தில் இருந்து சுலபமாக விடுதலை பெற சில வழிமுறைகள்
தேனில் ஊறவைத்த இஞ்சித் துண்டுகளை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சீராகும். நன்கு கனிந்த மாம்பழத்தை சாறு பிழிந்து, அதை அடுப்பில் லேசாக சூடேற்றவும். அதை ஆறவிட்டு, பின் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாதத்தை காலையில் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். ரோஜாப்பூவை கஷாயமாக வைத்து, அத்துடன், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பித்த நீர் கழிவுடன் சேர்ந்து வெளியேறும்.
அகத்திக்கீரை பித்தக் கோளாறுகளுக்கு அருமருந்து. அடிக்கடி அகத்தியை சாப்பிட்டால், பித்தக் கோளாறுகள் தூரப் போகும். பனங்கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், பித்தம் சீராகும். அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
Also Read | இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR