மாங்காயின் நன்மைகளும் அதன் சத்துக்களும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது சருமத்திற்கு கொடுக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தோல் பிரச்சனைகளை நீக்கும். பச்சை மாங்காயை எப்படி பயன்படுத்தினால் உங்கள் அழகு கூடும்? அழகைக் கூட்டும் செலவில்லா மாங்காய் தரும் தோல் பராமரிப்பு குறிப்புகள் இவை.


மாங்காய், சருமத்தின் உள்ளும் புறமும் ஏற்படும் மாசுக்களை சுலபமாக நீக்கும் பச்சை மாங்காய். மாங்காயில் உள்ள வைட்டமின் சி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு பல நன்மைகளையும் வழங்குகின்றன.  


மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்


சருமத்திற்கு பச்சை மாங்காயின் நன்மைகள்
 
சருமத்தின் வறட்சியை நீக்கும் மாங்காய்: சருமம் வறண்டு இருந்தால், மாங்காயை தயங்காமல் பயன்படுத்துங்கள். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் மாங்காய் தோல் வறட்சியை நீக்குகிறது.


முகப்பரு பருக்களை நீக்கும் மாங்காய்: பல நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற சத்துகள், மாங்காயில் உள்ளன, இவை, தோலில் உள்ள பருக்களை அகற்ற உதவுகிறது.



சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்கும் மாங்காய்: பச்சை மாங்காயில் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் உள்ளன, எனவே சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்ற அறிகுறிகளை நீக்கி, சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.


எண்ணெய் பசையை நீக்குகிறது: எண்ணெய் பசை சருமம் உள்ள பெண்களுக்கு, மாங்காயை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இது சருமத்தில் எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.


மேலும் படிக்க | பருக்கள் எல்லாம் எனக்கு ஜுஜுபி: சவால் விடும் நாகப்பழம்


மாங்காயின் இந்த நன்மைகளைப் பெற மாங்காயை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?


மாங்காயை உணவாக சாப்பிடுவது உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும். சரும அழகை மேம்படுத்த மாங்காயை ஃபேஸ் பேக்காக பயன்படுத்த வேண்டும்.
பச்சை மாங்காயின் சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து மாவை சேர்க்கவும்.


இப்போது இந்தக் கலவையுடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.


இந்த கலவை நன்கு கலவையாக இருக்க வேண்டும்.உளுந்து மாவு கட்டியாக இருக்கக்கூடாது. மென்மையான கூழாக இந்தக் கலவை இருக்க வேண்டும். 


கலவை மிகவும் தளர்வானதாக இருந்தால், உளுத்தம் மாவை சேர்த்து பசையை கெட்டியாக்கிக் கொள்ளவும்.


நன்கு கலந்த பிறகு உருவாகும் கலவையை 15 நிமிடங்களுக்கு ஃப்ரீசரில் வைக்கவும். இதனால் கலவை நன்றாக கெட்டியாகிவிடும்.


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு


முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்ளவும். இப்போது மாங்காய் கலவையை முகத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் காயவிடவும். கலவை நன்கு உலர்ந்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.


சிலருக்கு இந்தக் கலவை அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, கலவையை முகத்தில் பூசுவதற்கு முன்னதாக கையில் ஒரு பகுதியில் பூசி பத்து நிமிடம் விட்டு கழுவவும்.


பொதுவாக இது அனைவருக்கும் உகந்த கலவையாக இருக்கும். இருப்பினும் எரிச்சல், அரிப்பு அல்லது வேறு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக கழுவிவிடவும். பிறகு கொஞ்சம் எண்ணெயை தடவினால் சரியாகிவிடும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR