இரவு தூக்கம் வரலையா?: அப்போ 60-வினாடி டெக்னிக்ல தானா வரும்!!
60-வினாடிகளில் எளிதாக உறங்க தீர்வு `4-7-8 டெக்னிக்`
இரவில் தூக்கம் வராமல் அவஸ்தை படும் நபரா நீங்கள். அப்போ இதபண்ணுங்க. 60-வினாடிகளில் எளிதாக உறங்க '4-7-8டெக்னிக்' முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் நீங்கள் கண்களை மூடியபடி நான்குவினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும்.
அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும்.
அதன் பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இது போன்று தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது.
இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடுமாம்.