கொரோனா காலத்தில் நம்முடன் எப்போதும் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சில புதிய பொருட்கள் சேர்ந்துள்ளன. அவற்றில் சேனிடைசர்களும் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது கைகளை சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் சேனிடைசர்களில் ஓரளவு ஆல்கஹால் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. ஆனால் சமீபத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சில சேனிடைச்ர்களில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், பல சுகாதாரக் கேடுகள் வருவதாகவும், குருட்டுத்தன்மை போன்ற கடுமையான கோளாறுகள் கூட ஏற்படலாம் என்றும் FDA கூறியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் சேனிடைசர்களை வாங்கியும் விற்றும் வரும் நிலையில், இந்த விஷத் தன்மை வாய்ந்த ஆல்காஹாலை பயன்படுத்தி செய்யப்படுள்ள சேனிடிசர்களும் விற்பனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.


சில ஆல்கஹால்களில் Ethanol (ethyl alchohol) இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் wood alchohol என்று அழைக்கப்படும் Methanol-லும் உள்ளது என FDA எச்சரித்துள்ளது.


ALSO READ: ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?


FDA வெளியிட்டுள்ள ஒரு ரீகால் லிஸ்டில், 69 hand sanitizer-களின் பெயர்கள் உள்ளன. இவற்றை வாங்க வேண்டாம் என வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஜூலை 15 அன்று இந்த லிஸ்டில் மேலும் இரண்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.


“நுகர்வோரும் சுகாதாரப் பணியாளர்களும் Methanol இருக்கும் hand sanitizer-களை வாங்கக்கூடாது. 


ஆல்கஹால் அடிப்படையிலான செனிடைசர்களின் பாதுகாப்பான விநியோகத்தை அதிகரிக்க உற்பத்தியாளர்கள், கம்பவுண்டர்கள், மருந்தகத்தின் மாநில வாரியங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற FDA உறுதியுடன் உள்ளது.” என்று FDA ஆணையர் தெரிவித்தார்.


பல சர்வதேச சுகாதார அறிக்கைகளின்படி, நச்சு இரசாயனங்கள் உள்ள சேனிடைசர்களை நாம் பயன்படுத்தினால், குமட்டல், வாந்தி, தலைவலி, குருட்டுத்தன்மை, வலிப்பு போன்ற உடல் உபாதைகள் வரவும் சில சமயம் பயன்படுத்தியவர் கோமாவில் செல்லவும் வாய்ப்புள்ளது. கடுமையான விளைவுகள் இல்லாமல் உட்கொள்ளக்கூடிய ஒரே ஆல்கஹால் எத்தனால் மட்டுமே என்று கூறப்படுகிறது. அதனால்தான் குறைந்தது 60 சதவிகிதம் Ethanol உள்ள சேனிடைசர்களை பயன்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், Methanol மலிவாக இருக்கும் காரணத்தால், சில அனுபவமற்ற வேதியியலாளர்கள், இவற்றை சேனிடைசர்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள் என கூறப்படுகிறது.


’FDA Approved' என்று சேனிடைசர்களில் எழுதப்பட்டிருந்தாலும், பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் எந்தவொரு சேனிடைசரும் FDA-வால் நேரடியாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும் FDA கூறியது. மேலும், நன்கு அறியப்பட்ட மற்றும் பழக்கமான பிராண்டுகளையே வாங்குமாறும் FDA அறிவுறுத்தியுள்ளது. 


ALSO READ: உணவு உண்ட பிறகு குளிப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கும் Ayurveda