நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறிகளில் நீர்க்காய்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் சுரைக்காயு ஒன்று. சுரைக்காயில் 85 சதவீதம் அளவுக்கு நீர் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் என பல சத்துக்கள்
கொண்ட சுரைக்காயில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கும். வயிற்று போக்கை போக்கும். உடல் வலியை தணிக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவையான சுரைக்காய் சூப் ஆரோக்கியத்திற்கு நல்லது, பல கடுமையான நோய்களை குணப்படுத்தும் சுரைக்காய், ஆல் இன் ஆல் ஆரோக்கிய சூப்... ஆனால், காயாக சமைத்து உண்ண பலருக்கு பிடிப்பதில்லை. அதேபோல, சுரைக்காய் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அந்த சுவையும் பலருக்கு பிடிப்பதில்லை.


சுவையான சூப்பாக சுரைக்காயை மாற்றிவிட்டால், விருப்பத்துடன் குடிக்கலாம். அது ஆரோக்கியத்தை இரு மடங்காகும். சுரைக்காய் சூப் யாருக்கு என்ன செய்யும்?


சுரைக்காய் சூப்பின் நன்மைகள் 


உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் சுரைக்காய் சூப்பைக் குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து இருக்கும். சுரைக்காய் சூப் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.  


மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?


உடல் எடையை குறைக்க சுரைக்காய் சூப்


எடை அதிகரிப்பு பிரச்சனை உள்ளவர்கள், சுரைக்காய் சூப் குடிப்பது பயன் தரும். சுரைக்காய் சூப் குடித்தால், அது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி விடும் என்பதால் அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகிறது, இது உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், தினமும் இரவு உணவிலோ அல்லது மாலையிலோ சுரைக்காய் சூப் குடிக்கவும்.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூப்


சுரைக்காய் சூப் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நீங்கள் தொடர்ந்து சுரைக்காய் சூப்பை குடித்து வந்தால், அது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு ஏதேனும் தீவிரமான இதய நோய் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சுரைக்காய் சூப் குடிக்க வேண்டும்.


செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கும் சூப்


நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள பூசணிக்காய், செரிமான பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. எனவே செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுரைக்காய் சூப் அருந்தலாம். ஏனெனில் இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. சுரைக்காய் சூப் குடிப்பதால் மலச்சிக்கல், வயிற்றில் உருவாகும் வாயு மற்றும் அமிலத்தன்மை ஆகியவை சீராகும்.


மன அழுத்தத்தைக் குறைக்கும் சூப்


மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் பண்புகளைக் கொண்ட சுரைக்காய் சாறு குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை குறைக்க உதவும். மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் கோலின் உள்ளதால் சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.


சுரைக்காய் சூப் தயாரிக்கும் முறை


சுரைக்காய், தக்காளி, வெங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு இந்தக் கலவையை நீர் விட்டு வேக வைக்கவும். அதில் சிறிது சீரகம் மற்றும் கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த பிறகு ஆறவிடவும்.


ஆறிய கலவையில் இருந்து கறிவேப்பிலையை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துவிடவும். நைசாக அரைத்த பிரகு, நெய்யில் சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்துக் கொள்ளவும். உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்தால் சுரைக்காய் சூப் ரெடி. கொத்தமல்லி தழை சேர்த்து, சுரைக்காய் சூப்பை சூடாக குடிக்கவும்.


மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ