ஸ்டார்பக்ஸ் காபியில் அதிக அளவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட துரித உணவு கடைகளில் கடந்த வாரம் இது தொடர்பான திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் முக்கியமான பல உணவுக்கட்டுப்பாடு விதிகளை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடைபிடிக்காதது கண்டுபிடிக்கப்பட்டது.


ஸ்டார்பக்ஸ் மட்டுமில்லாமல் பல பெரிய துரித உணவு கடைகளுக்கு இந்த நோட்டிஸ் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மெக்டொனல்ட்ஸ், டன்கின் டோனட்ஸ் ஆகிய கடைகளுக்கும் இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. 


இதில் கலந்து இருக்கும் அதிகப்படியான வேதிப்பொருட்கள் புற்றுநோயை உருவாக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். காபியில் அதிக சுவை கொடுக்க வேண்டும் என்று சில நச்சு வேதிப்பொருட்களை அதிகமாக கலப்பதாக கலிபோர்னியா நீதிபதிகள் குற்றச்சாட்டு உள்ளது. 


இந்நிலையில் காபியில் அதிக அளவில் வேதிப்பொருட்கள் கலக்கவில்லை என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்களை இதுவரை அந்நிறுவனம் சமர்பிக்க வில்லை.


இதன் காரணமாக காபி கப்களில் புற்றுநோய் எச்சரிக்கை புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என்று கலிபோர்னியா நீதிபதிகள் கூறியுள்ளனர்.