எச்சரிக்கை! கேன்சரை வரவழைக்கும் ‘இந்த’ உணவுகளை விட்டு விலகியே இருங்க..!
புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் சில உணவுகளில் உள்ள பல்வேறு வகையான இரசாயனங்கள் மற்றும் கூறுகள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை.
நாம் உண்ணும் சில உணவுகளில் உள்ள பல்வேறு வகையான இரசாயனங்கள் மற்றும் கூறுகள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்ற சில வகை உணவுகளில் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும், சில ராசாயனங்கள் கலக்கப்படுகின்றன. நொறுக்குத் தீனிகள், ரெடி டு ஈட் தின்பண்டங்கள் அல்லது பல பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை நீண்ட நேரம் கெடாமல் இருக்க, அவற்றில் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், வண்ணங்கள், ப்ரிடர்வேடிவ்கள் மற்றும் செயற்கை இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை. புற்றுநோய் உட்பட இதயம் நோய்களின் அபாயத்தை இவை அதிகரிக்கலாம்.
புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் அருந்தும் பானங்கள். நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகள் உங்களை புற்றுநோயின் அபாயத்தில் ஆழ்த்துகின்றன. காலப்போக்கில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்வதை நீங்கள் குறைக்கவில்லை அல்லது முழுமையாக நிறுத்தவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் புற்றுநோயாளியாக மாறும் அபாயம் உள்ளது என நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்
உணவில் சேர்க்கப்படும் வண்ணங்கள்
உணவில் நிறம் சேர்க்க, மஞ்சள், ஆரஞ்சு என பல வகை வண்ண திரவங்கள் அல்லது பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை காண்டிமென்ட்கள், கேக், சீஸ், தானியங்கள், சிப்ஸ், குக்கீகள் மற்றும் பானங்களில் காணப்படுகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், அதன் பயன்பாட்டின் மூலம் சிறுநீரகம் மற்றும் குடல் கட்டிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வனஸ்பதி எண்ணெய்
வனஸ்பதி எண்ணெய்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். கனோலா, சோயாபீன், சோளம், சூரியகாந்தி ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகள். இவை தவிர, வேர்க்கடலை வெண்ணெய், உறைந்த உணவுகள், ரொட்டி, சிப்ஸ், சாலட் டிரஸ்ஸிங், மார்கரின் போன்றவற்றில் இது அதிகம் சேர்க்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
ஹாட் டாக், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் ஆகியவை 'வலுவான ஆதாரங்களுடன்' புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள் என்ற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உட்கொள்வது பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அவற்றில் நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளன. அவை தமனிகளை கடினப்படுத்துகின்றன.
மேலும் படிக்க | உடலில் இந்த குறைபாடெல்லாம் தெரிகிறதா... அது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!
சோடா எனர்ஜி பானங்களில் சேர்க்கப்படும் சுக்ராலோஸ்
டயட் சோடாக்கள், டிரஸ்ஸிங், சிரப் மற்றும் எனர்ஜி பானங்களில் காணப்படும் சுக்ரோலோஸ், நல்ல குடல் பாக்டீரியாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயற்கை இனிப்பு ஆகும். சுக்ரோலோஸ் ஒற்றைத் தலைவலி, மனநிலை மாற்றங்கள் மற்றும் வீக்கம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
துரித உணவுகளில் சேர்க்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG)
மோனோசோடியம் குளுட்டமேட் என்னும் இந்த ஆபத்தான ரசாயனம், சூப்கள், உறைந்த உணவுகள், சிப்ஸ், மாட்டிறைச்சி மற்றும் துரித உணவுகளில் காணப்படுகிறது. உணவின் ருசியை அதிகரிக்க MSG பயன்படுகிறது, ஆனால் உங்கள் வயிறு நிரம்பிவிட்டது என உங்கள் மூளைக்குச் சொல்லும் சமிக்ஞைகளைத் தடுக்கிறது. இதனால் தான் அவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
பிரெட்களில் சேர்க்கப்படும் அசோடிகார்பனாமைடு
பெரும்பாலான ரொட்டி மற்றும் ரொட்டி போன்ற பொருட்களை தயாரிக்க மாவை வெண்மையாகவும், மீள்தன்மையுடனும் மாற்ற அசோடிகார்பனமைடு பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுகளின்படி, இந்த மூலப்பொருள் எலிகளில் நுரையீரல் மற்றும் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தியது. மனிதர்களுக்கும் இவை புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | காலையில் முடி மற்றும் தோலுக்கு மோரை தடவினால் இவ்வளவு நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ