பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் ஹெச்1என்1 வைரஸ் முதன்முதலில் பன்றியிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது. பன்றிகளைக் கையாண்ட ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் பரவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2009-ம் ஆண்டில்தான் இந்தியாவுக்குள் பன்றிக் காய்ச்சல் நுழைந்தது. அதன்பிறகு ஆண்டுதோறும் இந்த நோயின் பாதிப்பைக் கண்டு வருகிறோம். 


பன்றிக்காய்ச்சலை எப்படித் தடுப்பது?


பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள வைரஸ் கிருமிகள் அவர் புழங்கும் இடங்களிலும் இருக்கும். அவற்றைத் தொட்டால் அடுத்தவருக்கும் அவை பரவும். இதுபோன்ற பொருள்கள் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம். 


இந்த நோய் பரவுவதைத் தடுப்பதில் கை கழுவும் பழக்கத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. அதனால் ஒருநாளைக்கு பத்துமுறையாவது கைகளைக் கழுவவேண்டும்.


காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளிவிட்டு விலகியிருக்க வேண்டும். சளி, காய்ச்சல் பாதித்தவர் உபயோகித்த ஆடை, கைக்குட்டை, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.