தமிழ்நாட்டு மாணவனின் புதிய கண்டுப்பிடிப்பு!!
கடந்த 2013-ம் ஆண்டு முதல் நாட்டில் புதுமைகளை படைக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதை தேசிய புதுமை அமைப்பு நடத்துகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் மனோஜ் கலந்து கொண்டுள்ளான்.
சைலன்ட் ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) ஏற்படப்போவதை முன்கூட்டி கண்டறிய உதவும் சுய பரிசோதனை கருவியை தமிழகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் மனோஜ் கண்டுபிடித்துள்ளான்.
மாரடைப்புக்கு காரணம் ரத்தத்தில் உள்ள எப்ஏபிபி3 என்ற சிறிய புரோட்டீன்கள்தான். ஆகாஷ் மனோஜ் உருவாக்கியுள்ள தொழில்நுட்ப கருவியில், தோலைப் போன்ற சிலிகான் சவ்வு உள்ளது. அதில் ஒரு துளி புரோட்டீன் அல்புமின் மற்றும் எப்ஏபிபி3 புரோட்டீன்கள் உள்ளன. இந்த கருவியில் சிறிய அளவு பாசிட்டிவ் மின்சாரம் செலுத்தும்போது, எப்ஏபிபி3 புரோட்டீன்கள் ஈர்க்கப்பட்டு ஒன்று திரள்கின்றன. இதில் அல்ட்ரா வயலட் ஒளி செலுத்தப்படுகிறது. அல்ட்ரா வயலட் ஒளி ஈர்க்கும் அளவை பொருத்து புரோட்டீன்களின் அளவை கண்டறிய இந்த கருவியில் சென்சார் உள்ளது.
இதே முறையில் அல்ட்ரா வயலட் ஒளியை தோல் மூலமாக செலுத்தி ரத்தத்தில் உள்ள எப்ஏபிபி3 அளவை கண்டறியலாம்.
இந்த புதுமையான சோதனை மூலம் ஒருவருக்கு மாரடைப்பு அபாயம் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிந்து மருந்துவரை சரியான நேரத்தில் சந்தித்து சிகிச்சை பெற முடியும்.