மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது - சவுமியா சுவாமிநாதன்
இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன்,காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
நீலகிரி: இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன்,காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.தற்போது பதவி உயர்வு பெற்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பணியாற்றி வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். பின்னர் மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி ஆதிவாசி கிராமத்துக்கு சென்று,அங்கு மக்களை சந்தித்து சுகாதாரம், குழந்தைகளின் கல்வி நிலை, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளதா? என விசாரித்தார். தொடர்ந்து ஆதிவாசி மக்களிடம் குழந்தைகள் அனைவரையும் கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் தெப்பக்காடு பகுதிக்கு வந்த சவுமியா சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது".என்று அவர் கூறினார்.
ALSO READ 20L தடுப்பூசி இலக்கை அடைய தமிழகத்தில் 10000 தடுப்பூசி முகாம்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR