ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


ஆண் மற்றும் பெண் இருபாலருக்கிடையிலான மூளை செயல்பாட்டில் அளவிடத்தக்க வேறுபாடுகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. 


குறிப்பாக, ஒரு விஷயத்தை உற்றுநோக்குதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஆணின் மூளையைக் காட்டிலும் பெண்ணின் மூளை மிகத் தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.


பெண்கள் பெரும்பாலும் அல்சீமர், மன அழுத்தம், ஆகியவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம், ஆண்கள் நடத்தை தொடர்பான பிரச்னைகளால் அதிகம் பாதிப்படைகின்றனர்.


ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் முன்பக்க மூளை (பிரிஃப்ரோன்டல் கார்டெக்ஸ்) பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர் என்பது தெரிகிறது.


அதேபோன்று, பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின்போது, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு உட்கொள்வதில் சீரற்ற தன்மை, கவலை எழுவதையும், அவற்றால் அவர்கள் ஏன் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது குறித்தும் ஓரளவுக்கு விவரிக்க முடியும். பொதுவாக ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்புடன் இயங்குகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.