உடல் பருமன் குறைய... நீங்கள் கவலைபடாமல் சாப்பிடக் கூடிய ‘4’ சர்க்கரைகள்!
சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. சர்க்கரையை தவிர்க்க முடியாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்க்கரைக்கும் மாற்றான பொருட்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
சர்க்கரை கொடுக்கும் அதீத ஆற்றலை பயன்படுத்தாதபோது, அதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, உடல் பருமனை அதிகரிக்கிறது. அதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை என்பது விஷமாகும். அதிக கலோரி கொண்ட சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. உலகில் எடை மிக விரைவாக குறையும். சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதும் எளிது. சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் இல்லாவிட்டாலும் கூட, சர்க்கரையை குறைத்துக் கொண்டு, சர்க்கரைக்கு மாற்றான சில ஆரோக்கியமான சர்க்கரைகளை பயன்படுத்தினால், நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும்.
சீனித்துளசி:
ஸ்டீவியா எனப்படும் சீனித்துளசி இலைகளில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம் உள்ளது. ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துக்களே இதில் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள். சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று. கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைப்போலவே தா, சீனித்துளசி செடியிலிருந்தும் சர்க்கரை எடுக்கப்படுகிறது. இதன் இலைகளை நன்றாக உலரவைத்து, அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி, அதில் இருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, பொடியாக்கப்படுகிறது. எடை இழப்புக்கு உதவும் குறைந்த கலோரி கொண்ட இயற்கை இனிப்பானாக, ஸ்டீவியா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ என்ற அளவில் இருக்கிறது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், ஸ்டீவியாவுடன் கூடிய இனிப்பு மற்றும் பானங்களை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தாது. சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் எடை (Weight Loss Tips), நன்றாக குறையும்.
பேரிச்சம்பழ சர்க்கரை:
பேரிச்சம்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் இரும்புச்சத்து, அண்டிஆக்சிடன்ட், அதிக அளவில் உள்ளது. பேரீச்சம்பழம் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்கள். பிரவுன் சர்க்கரையை விட பேரீச்சம் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இனிப்பு சுவை இருந்தபோதிலும், பேரீச்சம் பழத்தில், கிளைசெமிக் குறியீடு குறைவாகவே உள்ளன. மேலும், அவற்றில் நிறைய பிரக்டோஸ் உள்ளது, இது இயற்கையாகவே இனிமையான சுவையை அளிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, வெள்ளை சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. உடல் பருமனை குறைப்பவர்களுக்கு மட்டுமல்ல, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக கருதப்படும் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரம். இருப்பினும், அனைத்து சர்க்கரைகளைப் போலவே, பேரீச்சம்பழ சர்க்கரையும் மிதமாக பயன்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாங்க் பழச் சர்க்கரை:
மாங்க் பழச் சர்க்கரை என்பது மாங்க் பழச் செடியிலிருந்து பெறப்படும் இயற்கை இனிப்பு. இந்த பழம் சிறிய அளவில் வட்ட வடிவில் இருக்கும். சீனா மற்றும் தாய்லாந்தின் சில பகுதிகளில் அதிகம் விளையும் இந்த செடி பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீவியாவைப் போலவே இதுவும் இரத்தச் சர்க்கரையை அதிகரிக்காத மற்றொரு இயற்கை இனிப்பு. வெள்ளை சர்க்கரையை விட பல மடங்கு இனிமையானது. மாங்க் பழம் சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான மாற்றாகும் என கூறப்படுகிறது. மேலும் கீட்டோ உணவுகளில் சர்க்கரை மாற்றாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. இதில் குறைந்தளவு கலோரிகளே உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு செய்பவர்களும் இதை தைரியமாக சாப்பிடலாம் எனவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் இதை உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. சில ஆய்வுகள் மாங்க் பழங்களில் புற்றுநோய் அல்லது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றன.
பழங்கள்:
பழங்கள் பொதுவாகவே, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. சர்க்கரை ஆசையை கட்டுப்படுத்த பழங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனெறால், பழங்களில் இருக்கு ப்ரூடோஸ், குளூகோஸ் அல்ல. எனவே பல நிபுணர்கள் இதனை பாதுகாப்பான மாற்றாக கருதுகின்றனர். பழங்களை, காலை மாலை இரவு என எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இருப்பினும், செரிமானத்தை எளிதாக்க, ஹெவியான உணவுக்குப் பிறகு அல்லது இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்கவும். நட் வெண்ணெய், சியா அல்லது கொட்டைகள் போன்ற நல்ல கொழுப்புடன் பழங்களைச் சேர்த்து உண்ணுவது, உங்கல் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பதை சமன் செய்ய உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)