இப்பொது வெய்யலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மேலும் அக்னி நச்சத்திரம் ஆரம்பம்மாகி விட்டதால் இந்த கோடை காலத்தை எப்படி சமாளிப்பது என்றும் மற்றும் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்சியாக எப்படி வைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்பூசணி:
தர்பூசணி பழத்தில் நீர்சத்து அதிக அளவில் இருப்பதால் இதை சாப்பிட்டால் வெயிலினால் ஏற்படும் உடலின் வெம்மை குறையும். உடல் சூடு தணியும் அது மட்டுமின்றி உடலில் குளிர்ச்சி ஏற்படும்.


ஆரஞ்சு
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறு தான் ஆரஞ்சு. இதில் வைட்டமின் ஏ, சி, மற்றும் பி இருப்பதால் வெய்யில் காலத்தில் உண்டாகும் தோல் வியாதிகள் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடல் சூடு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறு போன்றவை ஏற்பட்டால் இரவில் படுப்பதற்கு முன் ஆரஞ்சு சாறு குடித்தால் நன்மை ஏற்படும்.


எலுமிச்சை: 
அதிகாலையில் வெதுவெதுப்பான நீருடன் தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து குடித்து வந்தால் நீங்கள் வெளியே போகும்போது சோர்வடையாமல் இருப்பதற்கு உதவும். மேலும் உங்கள் சர்மம் வெய்லினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுக்காக்கும்.


திராட்சை: 
வைட்டமின் ஏ அதிகம் உள்ள திராட்சைசாறு எடுத்து கொண்டால் வெயிலால் சரியாக பசி எடுக்காமல் மந்த நிலையில் காணப்படுபவர்கள் நன்றாக பசி எடுக்கும். உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.


பப்பாளி: 
கோடைகாலத்தில் வயிற்றில் ஏற்படும் நோய்களுக்கு பப்பாளிப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. வயிற்றில் புழு பூச்சிகளால் அவதிப்படுபவர்களுக்கும் பப்பாளி பழம் சாப்பிட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.


மாம்பழம்: 
வெயிலால் ஏற்படும் ரத்த அழுத்தம் சீராகும். உடலில் ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.


மாதுளை: 
மாதுளைசாறு மலம் மற்றும் பித்தம் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. குறிப்பாக பெண்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
 
வாழை: 
கோடைகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வேண்டும். உடலுக்கு தேவையான இரும்பு சக்தி அதிகமாக உள்ளது.