சம்மரில் வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இதை எல்லாம் கண்டிப்பா பண்ணுங்க
Summer Tips for Healthy Stomach: இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
Summer Tips for Healthy Stomach: கோடை காலம் வந்துவிட்டது. இனி இந்த வெயில் காலத்தில், நாட்கள் நீண்டு, கடுமையான வெப்பம் நம்மை வாட்டி வதைக்கத் தொடங்கும். இருப்பினும், கோடைக்காலத்தில் இருக்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிகின்றன. வெப்பமான வானிலை நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடைக்காலத்தில் நமது வயிற்றின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம்.
சில எளிய இயற்கையான வழிகளில் நாம் வெயில் காலத்தில் நமது வயிற்றை பாதுகாப்புடன் வைத்திருக்க முடியும். இந்த கோடையில் உங்கள் வயிற்றை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
நார்ச்சத்து
குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, நார்ச்சத்து மிக முக்கியமானது. ஏனெனில் இது குடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது நமது செரிமான அமைப்பு மூலம் உடல் செயல்பாட்டை சீராக இருக்க உதவுகிறது. கோடையில், நார்ச்சத்து இல்லாத ஐஸ்கிரீம் மற்றும் பார்பிக்யூ போன்ற அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், மலச்சிக்கல், உப்பசம் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. எனவே, உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கோடையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
புரோபயாடிக்குகள்
புரோபயாடிக்குகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இது செரிமானத்திற்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. தயிர், சார்க்ராட் மற்றும் கிம்ச்சி போன்ற புரோபயாடிக்குகளை உட்கொள்வது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளைத் தடுத்து செரிமானத்தை சீராக்குகின்றது.
இந்த உணவு பொருட்களை தவிர்க்கவும்
கோடைக்காலத்தில் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழலில் பாக்டீரியா வேகமாக வளரும். ஆகையால் கோடையில் உணவுகளில் அதிகப்படியான கவனம் தேவை. உணவு உட்கொள்ளும் முன் உங்கள் கைகளை கழுவவும். இறைச்சி சமைக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். சாப்பாடு மீதமிருந்தால் அதை சரியான முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். முடிந்த வரையில் பழைய உணவை சாப்பிடாமல் சரியான அளவில் சமைத்து சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க | தினமும் ‘இத்தனை’ மணிநேரம் நின்றால் நோயே வராதாம்!
மதுபானம்
இன்றைய காலகட்டத்தில், அலுவலக சந்திப்புகள், நண்பர்களின் சந்திப்புகள் என பல வகையான சமூகக் கூட்டங்களில் மதுபானம் ஒரு அங்கம்மாகி விட்டது. இருப்பினும், அதிகப்படியான மது அருந்துதல் செரிமானத்தை சீர்குலைத்து, நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கும். இதுவும் நீரழிவை ஏற்படுத்தும். ஆகையால், உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை குறைந்த அளவில் அருந்துவதும், இடையில் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் நல்லது.
உணவை மென்று உட்கொள்ளவும்
கோடைக்காலத்தில் நாம் பொதுவாக பல வித உணவுகளை உட்கொள்கிறோம். அதிக முறையும் சாப்பிடுகிறோம். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அவ்வப்போது உட்கொள்வதனால் நமது செரிமானம் சீர்குலையும். எந்த காலத்திலும், குறிப்பாக கோடையில் எந்த உணவை உட்கொண்டாலும், அதை நன்றாக மென்று உட்கொளவ்து நல்லது. இது செரிமானத்திற்கு உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ