Foods For Healthy Bone Read Tips In Tamil : வயது ஏற ஏற, நமது உடலிலும் உடல் பாகங்களிலும் ஆற்றல் குறைந்து கொண்டே வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆதலால், முடிந்த அளவிற்கு நமது நல்ல உணவுகளை எடுத்துக்கொண்டு, உடலை நன்றாக பார்த்துக்கொள்வதால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். உடலை பார்த்துக்கொள்வது மட்டுமல்ல, எலும்பையும் பத்திரமாக பார்த்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். வயதுக்கு ஏற்ப, எலும்புகளும் தேய்மானம் ஆகும். எலும்பை எந்த வயதிலும் வலுவாக்க உதவும் சூப்பர் உணவுகளின் பட்டியலை இங்கு காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால்:


பாலை முழுமையான உணவு என சிலர் குறிப்பிடுவதுண்டு. இதில் ஏராளமான கால்சிய சத்துகளும் மினரல் சத்துகளும் இருக்கிறது. இந்த சத்துகள் எலும்புகளை வலுவாக்க உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாலில் எலும்பை வலுவாக்கும் பல்வேறு வகையான புரத சத்துகளும், வைட்டமின் சத்துகளும் உள்ளன. இதனால் எலும்புகள் வலுவடையும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


கீரை வகை உணவுகள்:


கீரை வகை உணவுகளில் பல்வேறு வைட்டமின் சத்துகளும், மினரல் மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் இரும்பு சத்தால், உடலும் எலும்புகலும் வலிமையடைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி கீரை வகை உணவுகளை உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்வத்ஹால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்றும், எலும்பின் வலு அதிகரித்து செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 


பருப்பு வகைகள்:


அனைத்து வகை பருப்புகளிலும் எலும்புகளின் வலிமையை ஆதரிக்கும் மினரல் சத்துக்கள் உள்ளதாம். குறிப்பாக கருப்பு பீன்ஸ், மொச்சைக்கொட்டை, கிட்னி பீன்ஸ் ஆகியவற்றில் இந்த சத்துகள் அடங்கியிருக்கின்றனவாம். இந்த பீன்ஸ்கள், ஒருவரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காரணம், இதில் புரதம், ஃபைபர் மற்றும் வைட்டமின் சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றனவாம். 


மேலும் படிக்க | எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்கு தான்


ஃபேட்டி மீன்கள்:


ஃபேட்டி மீன் வகைகளுள் அனைவருக்கும் அனைவருக்கும் தெரிந்த, மிகவும் பிரபலமான மீன், சால்மன் மீன் ஆகும். இது மட்டுமன்றி, ஃபேட்டி மீன் வகைகளுள் இன்னும் நிறைய வகைகள் இருக்கின்றன. இவற்றில் உடலுக்கு சத்து கொடுக்கும் புரதம், ஐயோடின் மற்றும் மினரல் சத்துக்கள் உள்ளன. ஒரு சிலவற்றில் கால்சியம் சத்துக்கள் காணப்படும். இவற்றை சாப்பிடுவதால், எலும்புகள் வலுவாகும், உறுதியடையும். 


சோயா உணவுகள்:


சோயா வகை உணவுகள் கொழுப்பு குறைந்தவையாக இருக்கும். மேலும், சில சோயா வகை உணவுகளில் ஃபைபர் சத்துகளும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டும் காணப்படும். உதாரணத்திற்கு முளைப்பயிர்கள், சோயா பால், சோயா விதைகள் ஆகியவற்றில் மேற்கூறிய சத்துகள் காணப்படலாம். உடலுக்கு தேவையான புரதம், கால்சியம் மற்றும் வைட்டைன் டி சத்துக்களை இந்த உணவுகள் அளிக்கின்றன. உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்க, இந்த உணவுகள் உதவலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


நட்ஸ்கள்:


உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகை உணவுகளில் வைட்டமின் டி சத்துகள் அதிகமாகவே இருக்கும். இவற்றை ஹெல்தி ஸ்நாக்ஸ்கலாகவும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இது மட்டுமன்றி, தினமும் காலை சூரிய ஒளியில் நடப்பதும் எலும்புகளை வலுவாக்க உதவுமாம். 


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் காபி குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனையெல்லாம் வரும் ஜாக்கிரதை!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ