புதுடெல்லி: உடல் எடையைக் கட்டுப்படுத்த பல வழிகளை நாம் பின்பற்றினாலும், ஆரோக்கியமான உணவுமுறை இதற்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. அதற்கு பதிலாக நிலையான கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சி (Steady-state cardiovascular exercise) முயற்சித்துப் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாததால் மட்டுமே ஆண்டுதோறும் 32 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் சொல்கின்றன.


பொதுவாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இதயத் துடிப்பை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த உடற்பயிற்சி செய்யப்படுகிறது. இருதய அமைப்பை இஅல்லாகக் கொண்டு செய்யப்படும் இந்த உடற்பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரல் திறனையும் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.



நடைபயிற்சி, ஓட்டம், எளிதான நடை மற்றும் பைக்கிங் ஆகியவை நிலையான இந்த உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகும். உடல் செயல்பாட்டைத் தக்கவைக்க தசைகளுக்கு ஆற்றலை உருவாக்க ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்க அனுமதிக்கும் இந்த வகையான உடற்பயிற்சி இதய தசையை பலப்படுத்துகிறது, இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யும் திறனை அதிகரிக்கிறது. மேலும் காலப்போக்கில், இது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.


மேலும் படிக்க | இத்துணூண்டு புளிக்குள்ள இத்தனை மாயமா? ஆரோக்கியத்தை அள்ளித் தரும் புளியம்பழம்


உடற்பயிற்சியின் மூலம் எடை மேலாண்மை


ஸ்டெடி-ஸ்டேட் கார்டியோ படிப்படியாக உடலில் திறன் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது, அதிக சோர்வு இல்லாமல் நீண்ட காலத்திற்கு நடவடிக்கைகளில் ஈடுபட உதவுகிறது. ஆக்ஸிஜனை திறமையாகப் பயன்படுத்துவதற்கான உடலின் திறன் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடல் செயல்திறன் மேம்படுகிறது.


கொழுப்பை எரிக்கும் ஸ்டெடி-ஸ்டேட் கார்டியோ உடற்பயிற்சி


வழக்கமான ஸ்டெடி-ஸ்டேட் கார்டியோ கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுவதால், எடை மேலாண்மை சுலபமாகிறது. ஆரோக்கியத்தை கொடுத்து உடல் அமைப்பை மேம்படுத்துகிறது. அதிலும் இந்த ஸ்டெடி-ஸ்டேட் கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் ஒருவர், உணவு பழக்கத்தையும் சீராக வடிவமைத்துக் கொண்டால், சீரான உடல் எடையை பராமரிக்கலாம்.


இந்த உடற்பயிற்சி, உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், உடல் கொழுப்பைக் குறைப்பதால், உடல் எடை குறைய வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மேஎலும், வழக்கமாக இந்த உடற்பயிற்சியை மேற்கொண்டால், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறையும். ஏனென்றால், இது எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டி, நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தி மனநலத்தையும் மேம்படுத்துகிறது.


நடை பயிற்சி


ஸ்டெடி-ஸ்டேட் கார்டியோ பயிற்சிகள் செய்ய எளிதானவை. ஜாகிங், நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் திறந்தவெளியிலும், வீட்டிற்குள்ளும் செய்யலாம். வேறு எதுவும் செய்யமுடியாவிட்டாலும், நடை பயிற்சி, அதிலும் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், எலும்புகளைப் பாதுகாக்கும் விதமாக தசைகளை வலுப்படுத்தி, நமது ஆற்றல் அளவை அதிகரிக்கும்


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை சுமூகமாக தீர்க்க 9 உணவுகள்! நல்ல கொழுப்புக்கு கேரண்டி தரும் டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ