சின்ன விஷயத்தைகூட உங்களால் தாங்க முடியலையா?
அதிகப்படியான அதிர்ச்சையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மை உங்களிடம் இருக்கிறதா? -அப்போ இதை கண்டிப்பா படிங்க!
அதிகப்படியான அதிர்ச்சையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மை உங்களிடம் இருக்கிறதா? -அப்போ இதை கண்டிப்பா படிங்க!
மகிழ்சிகரமான நிகழ்வோ அல்லது அதிர்ச்சியளிக்கும் துர்க்கமான நிகழ்வோ திடீர் என்று நாம் அதை கேள்விப்படும் போது நாம் மற்ற விசயங்களில் கவனத்தை செலுத்த முடியாமல் அதை பற்றியே நினைத்துக்கொண்டே இருப்போம்.
இது போன்ற சம்பவங்களை சிலரால் எளிமையாக எடுத்துகொள்ள முடியும், இன்னும் சிலரால் எளிமையாக எடுத்துகொள்ள முடியாது. உங்களுக்கும் இது போன்ற அதிர்ச்சி தரக்கூடிய விசயங்களை தாங்கிக் கொள்ள முடியாத தன்மை உடையவரா?.
அப்போ இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்காகத்தான். சந்தோசம், மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகியவை எல்லாம் மிகச் சாதரணமாக நாம் தினமும் கடந்து வர வேண்டிய விஷயங்கள் தான். ஆனால் இதன் தாக்கம் நம் உடலில் அதிகப்படியாக மாற்றங்களை உருவாக்குவது, அதிக ஆக்ரோசமாக்குவது அல்லது எதுவுமே செய்யவிடாமல் தடுப்பது ஆகியவற்றை தான் போஸ்ட் ட்ராமெட்டிக் ஸ்ட்ரஸ் என்கிறோம்.
இந்த நோய்க்கான அறிகுறியானது ஒவ்வருவருக்கும் வெவ்வேறு விதமாக வெளிப்படும்.
சிலருக்கு உடனேயே வெளிப்படும், சிலருக்கு சில நாட்கள் கழித்து, இன்னும் சிலருக்கு
மாதக்கணக்கில் கூட ஆகலாம். இவர்களை விட இவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு தான் பிரச்சனை அதிகம்.
இது ஒரு வகை மன அழுத்தம் தான், ஆனால் அவை தீவிரமாக நம்மிடத்திலிருந்து வெளிப்படுவதினால் தான் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்குமோ என்று பயம் ஏற்படுகிறது. இதனை தீர்க்க அல்லது கட்டுப்படுத்த சில அவசியமான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:- முகத்தில் எப்போதும் பயத்துடனும் அல்லது படபபடப்புடனும் இருப்பார்கள். எதையாவது நினைத்து பயந்து கொண்டோ அல்லது ஆக்ரோசமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருப்பார்கள்.
சிலர் அமைதியாக ஒடுங்கி இருப்பார்கள், சிலர் கொன்று விடும் ஆக்ரோசத்தோடு கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கி உடைக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பார். டென்ஷன் ஆனா இப்டி தான் கத்துவாரு என்று பலரும் சாதரணமாக எடுத்துக் கொள்வதினால் தான் இந்தப் பிரச்சனை மீகத்தீவிரமான அளவினை எட்டுகிறது.
இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்...!
தினமும் காலையில் அரை மணி நேரம் வாக்கிங் செல்வதோடு மட்டுமின்றி உடற்பயிற்சி, நீச்சல், ஓட்டப்பயிற்சி, நடனம் போன்றவற்றை மேற்கொள்ளலாம் கை, கால்களுக்கு தொடர்ந்து அதிகப்படியான வேலை கொடுக்கும்படியான கடினமான வேலைகளை செய்ய வேண்டும். எதாவது தற்காப்பு கலை, உடல் எடை, குத்துச்சண்டை, மலையேறுதல் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.
எப்போதும் அதுபற்றியே மட்டும் நினைத்துக் கொண்டு சுயபச்சாதாபம் பட்டுக் கொண்டு சோர்ந்து உட்கார்ந்திருக்காதீர்கள். பிறருடன் பேசுங்கள், சிரித்து மகிழுங்கள், மிக முக்கியமாக மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒரு மனிதர் உங்கள் முன்னால் நிற்கிறார் என்றால் அவரைப் பார்த்ததுமே அவரைப் பற்றிய பிம்பத்தை நீங்களாக உருவாக்கி முன் அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.