இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உடல் பல வகையான நச்சுக்களின் கூடாரமாக மாறி விட்டது. இவை பல உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகின்றது. உடலில் கழிவுகள் சேரத் தொடங்குவதால், ஆரோக்கியம் பெரிதளவு பாதிக்கும் என்பதால், அதன் அறிகுறிகளை கண்டறிந்து, உடலை அவ்வப்போது டீடாக்ஸ் செய்து நச்சுக்களை வெளியேற்றுவது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் தன்னைத் தானே சுத்தம் செய்யும் திறன் கொண்டதாக இருந்தாலும், நச்சுத்தன்மையும் அழுக்குகளும் அளவிற்கு அதிகமாக இருந்தால், அதற்கு கூடுதல் கவனிப்பு தேவை. உடலில் சேரும் அழுக்குகளையும் நச்சுக்களையும் சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவது சிறந்த பலன் (Health Tips) கொடுக்கும்.


உடலில் நச்சுகள் அளவிற்கு அதிகமாக உள்ளதை எடுத்துக் காட்டும் சில அறிகுறிகள்


செரிமான பிரச்சனைகள்


உடலில் நச்சுக்கள் அளவிற்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் வீக்கம், மலச்சிக்கல் அல்லது அஜீரணம் போன்ற பல பிரச்சனை அடிக்கடி ஏற்படும்


சோர்வு மற்றும் பலவீனம்


நன்றாக உணவு சாப்பிட்டும் கூட காரணமே இல்லாமல் சிறிய வேலைகளைச் செய்யும்போது கூட அடிக்கடி சோர்வாகவும் பலவீமனமாகவும் உணர்ந்தால், உங்கள் உடலில் நச்சுகள் மற்றும் அழுக்குகள் அதிக அளவில் குவிந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.


மனநிலை மாற்றங்கள் மற்றும் மன சோர்வு


உடலில் நச்சுக்கள் இருந்தால், மன நிலையில் மாற்றங்கள், மனதில் சோர்வு, வருத்தம், கவலை அல்லது அதிக மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம்.


சரும பிரச்சினைகள் 


உடலில் ரத்தத்தில் அதிக அளவில் நச்சுக்கள் இருந்தால், சருமத்தில் தடிப்புகள், முகப்பரு அல்லது பிற தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். உடலில் இருந்து கழிவுகளை அகற்ற உடல் முயற்சிக்கும் போது, இந்த நிலை ஏற்படுகிறது.


மேலும் படிக்க | லுடீன் சத்து நிறைந்த மிளகாய்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்


தூக்கமின்மை


சில சமயங்களில் தூக்கம் வராமல் சிரமம் ஏற்படுவதற்குக் காரணம் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களாகும். தூக்கமின்மைக்கு, மன அழுத்தம் மட்டுமல்ல, உடலில் சேரும் டாக்ஸின்களும் ஒரு காரணம்


உடலில் சேருக்கும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் இயற்கை வழிகள்


இஞ்சி, எலுமிச்சை மற்றும் பசு மஞ்சள் சேர்த்த டீடாக்ஸ் பானம்


சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய எலுமிச்சை, இஞ்சி மற்றும் பசுமஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்க்கவும். இரவு முழுவதும் இது தண்ணீரில் ஊறட்டும். இந்த டீடாக்ஸ் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது பலன் தரும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி, வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, குர்குமின் நிறைந்த மஞ்சள் ஆகியவை கலந்த இந்த பானம் மிக அருமையான டீடாக்ஸ் ட்ரிங்க். 


இஞ்சி மற்றும் தேன் தேநீர்


இஞ்சியை பொடியாக நறுக்கி அல்லது துருவி தண்ணீரில் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து பின் தேன் சேர்த்து குடிப்பது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. அதே நேரத்தில், தேன் வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. உடலை உள்ளிருந்து சுத்தம் செய்யும் சிறந்த டிடாக்ஸ் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்த டீடாக்ஸ் பானம்


சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில் மிக பொடியாக நறுக்கிய வெள்ளரி, எலுமிச்சை, புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து குறைந்தது 12 மணி நேரம் ஊற வைக்கவும். இரவில் தயாரித்த இந்த டீடாக்ஸ் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் நீங்கும். நார் சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காய் மற்றும் புதினா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 


செலரி சாறு


சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் கீரை வகை இந்த செலரி. செலரி ஜூஸில் அதிக அளவு நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. செலரியில் கிட்டத்தட்ட 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் நிறைந்துள்ளன. உடலை டீடாக்ஸ் செய்யும் செலரி ஜூஸை தினமும் காலை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் மூலம், உடலிலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறி, குடல் ஆரோக்கியம் மேம்படும். செலரி இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸியில் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் இதனை வடிகட்டி குடித்து வரலாம். இதன் சுவை சற்று துவர்ப்பாக இருக்கும் என்பதால், தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்து கொள்ளுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ