Healthy Snacks With Low Calories: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு குறைந்த கலோரி கொண்ட உணவுகள் தான் தேவை. எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கான சிறந்த சுவையுடன் கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகளை அறிந்து கொண்டு டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் பெறலாம்.
உடல் பருமன் குறைய தினம் சாப்பிடும் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
ஆரோக்கியமாக இருக்க ஒரு ஆணுக்கு தினசரி உணவின் மூலம் 2500 கலோரிகள் தேவைப்படுகின்றன. ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2000 கலோரிகள் தேவை.
Low Calorie Healthy Snacks: குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான உணவுகள் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். அந்த வகையில் குறைந்த கலோரியுடன் கூடிய சுவையான சிற்றுண்டி வகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
காய்கறி - பருப்பு சேர்த்த உப்புமா: உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு சம்பா கோதுமை ரவை சிறந்த நார்ச்சத்து நிறைந்த இந்திய சூப்பர்ஃபுட். அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதில் காய்கறிகளை சேர்த்து சமைக்கவும். அதில் வேக வைத்த கடலை பருப்பையும் சேர்த்தால் போதும். மிகவும் சுவையான, ஆரோக்கியமான டயட் உணவு நொடியில் ரெடி.
பாசி பருப்பு தோசை: கொத்துமல்லி சட்னியுடன் கூடிய புரதம் நிறைந்த பாசி பருப்பு தோசை மிக சிறந்த சிற்றுண்டி. பாசிப்பருப்பு பதிலாக பாசி பயறை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய காரட், கோஸ் போன்றவற்றை சேர்த்து தயாரிப்பதன் மூலம் மிகவும் சுவையான, ஆரோக்கியமான டயட் உணவு நொடியில் ரெடி செய்யலாம்.
சுண்டல் வகைகள்: கொத்துக்கடலை, பாசிபயறு, பட்டாணி போன்ற புரத சத்து கிக்க சுண்டலை தயாரிப்பது மிகவும் எளிது. புரதம் நார்ச்சத்து நிறைந்த சுண்டலை தயாரிக்க, வேக வைத்த வைத்த பருப்பில் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து தாளித்தாலே போது. உங்களுக்கு பிடித்த சில காய்கறிகளை பொடியாக நறுக்கி கலந்து சாப்பிடலாம்.
முளை கட்டிய தானியங்கள் சாலட்: தானியங்களை முளை கட்டுவதால், அதன் சத்துக்கள் இரட்டிப்பாகின்றன. புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முளை கட்டிய தானியங்களை சிறிது வேக வைத்து, உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்ந்து எலுமிச்சை சாற்றை பிழிந்தால் போதும். சுவையான சிற்றுண்டி தயார்.
பாப்கார்ன்: நார்ச்சத்து நிறைந்த பாப்கார்ன் செரிமானத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது வீட்டிலேயே தயாரிப்பது தான் சிறப்பு. ஏனெனில் சந்தையில் கிடைக்கும் பாப்கார்னில் அதிக அளவு வெண்ணெய் இருப்பதால் அது நல்லதல்ல.
ஆவியில் வேக வைத்த சோளம்: சோளத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. சோளத்தை ஆவியில் வேகவைத்து, உப்பு, கருப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தால் மிகச்சுவையான சிற்றுண்டி தயார். மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் இது சிறந்த உணவாக கருதப்படுகிறது. செரிமான ஆரோக்கியத்துடன், கண்களுக்கும் நல்லது என்று கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.