ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, கருவுறுதல் பிரச்சினைக்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டால் அதற்கு உடனடி தீர்வு காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருவுறாமை என்பது ஆறு முதல் பன்னிரெண்டு மாதங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகும் கருத்தரிக்க முடியாமல் இருப்பதைக் குறிக்கிறது,


மருத்துவ வரலாறு, வயது அல்லது உடல்நலக் கோளாறுகள், ஏற்கனவே நோய் இருப்பவர்களைத் தவிர, வேறு அனைவரும் 12 மாத உடலுறாவுக்குப் பிறகும் கருவுறாமல் இருந்தால் அதற்கு மருத்துவரை அனூகலாம்.


கருவுறாமை பிரச்சனைக்கும் அறிகுறிகள் உண்டு என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிவதில்லை.  உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் 48 மில்லியன் தம்பதிகள் மற்றும் 186 மில்லியன் நபர்களுக்கு கருவுறாமை பிரச்சனை இருக்கிறது.


மேலும் படிக்க | Health Alert: குளிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள்! 


இதில் தம்பதிகளில் பாதிக்கும் அதிகமானவர்கள் மருத்துவ உதவியுடனோ அல்லது மருத்துவ சிகிச்சைகள் இல்லாமலேயே கருத்தரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்ற தவறான கருத்து தற்போது மாறிவருகிறது.  கருத்தரித்தலுக்கு பல காரணிகள் உள்ளன. 


ஆணுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தி இருப்பதும், பெண்ணுக்கு ஆரோக்கியமான கரு முட்டைகள் இருப்பதும் கருவுறுதலின் அடிப்படை காரணிகள் என்றால், இதைத்தவிர வேறு பல காரணங்களும் உள்ளன.


மேலும் படிக்க | மெடபாலிஸத்திற்கும் எடை இழப்புக்கும் உள்ள தொடர்பு


விந்தணுவின் கருத்தரிக்கும் திறன், கருவின் தரம் மற்றும் பெண்ணின் கருப்பையில் பொருத்துவதற்கான திறன் என பல காரணங்களால் கருவுறுதல் தள்ளிப்போகலாம்.


சரியான நேரத்தில் தேவையான சிகிச்சையைப் பெற ஆண்கள் மற்றும் பெண்கள் கருவுறாமைக்கான பல அறிகுறிகளையும் காரணங்களையும் அறிந்து கொள்வது அவசியம்.


ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறிகள்


ஒவ்வொரு நபருக்கு கருவுறாமைக்கான அறிகுறிகள் மாறுபடும் என்றாலும் இவை பொதுவானவை.


டெஸ்டிகுலர் வலி மற்றும் வீக்கம்
சிறிய உறுதியான விரைகள்
விந்து வெளியேறுவதில் சிக்கல்கள்
விறைப்புத்தன்மையை பராமரிக்க இயலாமை
பாலியல் ஆசைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம்


மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் தாக்கம்


பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறிகள்


கருவுறாமைக்கான அறிகுறிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும் என்றாலும் இவை பொதுவானவை.


ஒழுங்கற்ற மற்றும் அசாதாரணமான மாதவிடாய் 
மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் மாறிக்கொண்டே இருப்பது
மாதவிடாய் காலத்தில் அதிகமான அல்லது குறைவான ரத்தப் போக்கு
ஹார்மோன் மாற்றங்கள்: முகப்பரு போன்ற தோல் மாற்றங்கள், உதடுகள், மார்பு மற்றும் கன்னம் ஆகியவற்றில் முடி வளர்ச்சி 
உடல் பருமன்
பாலியல் விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள்
மார்பின்  முலைக்காம்புகளிலிருந்து திரவம் சுரப்பது  
எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறியாக இருக்கலாம். 
மாதக்கணக்கில் மாதவிடாய் வராமல் இருப்பது 


இவை அனைத்தும் ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறாமைக்கான முக்கியமான அறிகுறிகள் ஆகும்.


மேலும் படிக்க | உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR