சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பு போதும்
நமது சமையலுக்கு சுவையும், மணமும் கொடுப்பதில் பெருஞ்சீரகம் தனித்துவ குணம் கொண்டதாக இருக்கும் அதே சமயம், இதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் எராளம்.
அஞ்சறைப் பெட்டியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய பொருள்களில் சோம்பு என்னும் பெருஞ்சீரகம் அடங்கும். சைவ மற்றும் அசைவ கிரேவிகள், கூட்டு, பொறியல்கள் என அனைத்து வகை சமையல்களிலும் சுவையையும் மணத்தையும் கூட்ட சோம்பு இன்றியமமையாதது. நமது சமையலுக்கு சுவையும், மணமும் கொடுப்பதில் பெருஞ்சீரகம் தனித்துவ குணம் கொண்டதாக இருக்கும் அதே சமயம், இதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் எராளம்.
சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
1. சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் சோம்பை எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. பெருஞ்சீரகத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளனஇது தவிர, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன.
2. பெருஞ்சீரகம் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. அதோடு, குடல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. இதனல், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு (Weight Loss Tips) சிறந்த தேர்வாக இருக்கும்,
3. பால் சுரப்பை தூண்டக் கூடியது சோம்பு. எனவே, தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.
4. மலச்சிக்கல் பிரச்சனை தீர சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவது மிகவும் பலன் அளிக்கும். னெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது. வாயு, வயிற்று வலி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் சோம்பு மிகவும் உதவியாக இருக்கும். வயிற்று தசைகளை தளத்தும் ஆற்றலும் சோம்பிற்கு உண்டு.
5. பெருஞ்சீரகம் என்னும் சோம்பு நேத்ர ஜோதி என அழைக்கப்படுகிறது. உங்கள் கண்களுக்கு அதிசயங்களைச் செய்யும். இதில் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. கண் அழுத்த நோய் என்னும் கிளைகோமாவிலிருந்தும் பாதுகாக்கிறது. கண் திரையை வலுப்புத்தி கண் பார்வையை கூர்மையாக்குகிறது. சோம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண் பர்வை கூர்மைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
6. பெருஞ்சீரகத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு சத்து இருக்கிறது. இது நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
7. நமது சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் தொடர்பான கோளாறுகளுக்கு சோம்பு நிவாரணம் தரும். அதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும்.
8. சோம்பை வாயில் போட்டுக் கொண்டு மெல்லுவதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
9. சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை போக்க தேவையான தாமிரச் சத்து, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுச் சத்துக்கள் சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தில் காணப்படுகின்றன.
10. சமையலில் மசாலாப் பொருளாக பயன்படுத்தப்படும் சோம்பு என்னும் பெருஞ்சீரகம், பாட்டி வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இதற்கு பொறூப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ