Amla Juice Benefits: அருமருந்து, கிட்டத்தட்ட 100 விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன என்பதை இதற்குக் காரணம்.
நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள் மற்றும் அரிய ஊட்டச்சத்துக்கள் காரணமாக, ஆயுர்வேதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், உச்சி முதல் பாதம் வரை மன நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை காணலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காயில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை அதிகாலை வெறும் வயிற்றில் குடிப்பதனால், உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
மூளை ஆரோக்கியம்: நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள், மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சி அளித்து, மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படும் நெல்லிக்காய் என்னும் ஆம்லா ஜூஸ், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த பானம்.
கல்லீரல் ஆரோக்கியம்: நெல்லிக்காயை வெறும் வயிற்றில் குடிப்பதால், கல்லீரலில் சேரும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கும். கல்லீரல் பிரச்சனை அல்லது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட, நெல்லிக்காய் ஜூஸ் அருமருந்தாக இருக்கும்.
இதய ஆரோக்கியம்: கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் நெல்லிக்காய் ஜூஸுக்கு உண்டு. இளைஞர்கள் கூட மாரடைப்பு, இதய பிரச்சினை போன்ற போன்ற போன்ற போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலையில், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது மாரடைப்பு பக்கவாத அபாயத்தை பெரிமளவு குறைக்கும்.
உடல் பருமன்: சிறந்த டீடாக்ஸ் பானமான நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால், வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை மலமலவென்று குறையும். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கும்.
நீரிழிவு: சர்க்கரை நோயாளிகள் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க, காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம். காபி டீ குடிப்பதற்கு பதிலாக இதனை குடிப்பதால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இளமையைக் காக்க: துமையை ஒத்தி வைக்கவும் இளமையை காக்கவும், வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காய் சரும சுருக்கங்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கூந்தலுக்கு ஊட்டமளித்து அதன் வேர்களை வலுப்படுத்துகிறது. இளநரை ஏற்படுவதை தடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.