நரை முடி பிரச்சனைகளை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. மாறிவரும் வாழ்க்கை முறையால் பெரும்பாலானோரின் தலைமுடி இளம் வயதிலேயே நரைக்க தொடங்கி விடுகிறது. இப்போது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர். இளமையில்  நரை முடி  ஏற்படுவதற்கு டென்ஷன் முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முடியை கருமையாக்குவதற்கு சந்தையில் பல ரசாயனங்கள் கிடைத்தாலும், இயற்கையாகவே கருமையாக்குவது தான் எப்போதுமே சிறந்தது. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. எனவே புளியை பயன்படுத்தி முடியை எப்படி கருப்பாக்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


புளியின் புளிப்பான சுவை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆனால் இந்த புளிப்பு உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடுமையான கோடை காலத்தில் முடியை பராமரிப்பது மிகவும் கடினம், இதன் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. கொளுத்தும் வெயில் காரணமாக சருமமும் தலை முடியும் பெரிதும் பாதிக்கிறது. 


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


இந்நிலையில், தினமும் உணவில் புளி சேர்த்துக் கொண்டால் இந்த இரண்டு பிரச்சனைகளும் தீரும் என்கின்றனர் நிபுணர்கள். புளியில் வைட்டமின் சி, விட்டமின் ஏ,  ரிபோஃப்ளேவின், நியாசின்,தயாமின் மற்றும் போலிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் இதில் உள்ளன. இந்த வைட்டமின்கள் முடி மற்றும் உடலின் செல் மீளுருவாக்கம் செய்ய உதவும். 


மேலும் படிக்க | Grey Hair: நரை முடியை கருமையாக்கும் காபி; பயன்படுத்தும் முறை


முடி பலவீனமாக இருந்தால் கைப்பிடியளவு புளியை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து அதன் சாறை எடுத்து திப்பி இல்லாமல் வடிகட்டவும்.


பின்னர், இதை கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்த 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு கொண்டு கூந்தலை சுத்தம் செய்யவும். இறுதியாக உங்கள் தலைமுடியை 15 நிமிடங்களுக்கு ஒரு சூடான துண்டினால், கட்டவும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடி வலுப்படும்.


இளநரையை போக்க புளியை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். தென்னிந்திய உணவில், புளி முக்கிய பங்கு வகிப்பதால், அதனை சேர்ப்பதில் எந்த வித சிரமும் இல்லை எனலாம். இது வெள்ளை முடி பிரச்சனையை தீர்க்கும்.


முடி கருமையாகும்


சிலருக்கு முடி உதிர்வு அதிகமாகி பின்னர் வழுக்கையாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், புளி உங்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். இதை உணவில் தவறாமல் சேர்ப்பதன் மூலம் கூந்தல் வலுவாகவும், பளபளப்பாகவும் மாறும். இதன் மூலம், இள நரையையும் கருப்பாக மாற்றலாம்.


முகத்திற்கு பொலிவு வரும்


புளியை உட்கொள்வது சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாவதைத் தடுக்கிறது. இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புளியைக் கொண்டு ஃபேஸ் பேக்கைத் தடவினால், முகத்தில் உள்ள புள்ளிகள் நீங்கி, அபரிமிதமான பொலிவு வரும்.


புளி உடல் எடையையும் குறைக்கும்


புளியில் கொழுப்பு எதுவும் இல்லை. அதனால்,  கலோரிகள் உட்கொள்ளும் அளவு அதிகரிக்காது. மேலும்  உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.


கல்லீரலுக்கும் நன்மை பயக்கும்


கல்லீரல் நம் உடலில் மிக முக்கியமான உறுப்பு, அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், எனவே கொழுப்பு கல்லீரல் பிரச்சனை  இருந்தால், இன்றிலிருந்து புளியை தவறாமல் சாப்பிடத் தொடங்குங்கள், ஏனெனில் இதில்  உள்ள புரோசியானிடின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் சேதத்தைத் தடுக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR