உடல் எடையை குறைக்க புளியையும் எடுத்துக்கொள்ளலாம்
உடல் எடையை குறைப்பதற்கு புளியும் பயன்படுகிறது. அதில் நார்ச்சத்து அதிகமாகவும் கொழுப்புச்சத்து கம்மியாகவும் இருக்கின்றன.
அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். அதேசமயம் ஜீரணத்திற்கு மட்டுமின்றி, புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. புளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து கம்மியாகவும் இருக்கும். இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால், வயிற்று உபாதைகள் சீராகி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள பிளேவனாய்டு மற்றும் பாலிபினால், உடல் செயல்பாடுகளைத் தூண்டி அதிக எடையை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து பசியை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஈர்ப்பைக் குறைக்கிறது. தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பிளேவனாய்டு கெட்டக் கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. புளியை உணவில் சேர்த்துக்கொள்வது, உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், இன்சுலின் அளவைக் குறைத்து ரத்தத்தில் இருக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான செயல்முறையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
மேலும் படிக்க | கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதேபோல், வயிற்றுப் புண்களை ஆற்றவும், கொழுப்பைக் கரைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் ஆண்டிசெப்டிக் பண்புகள் தொற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புளி வகைகளில் கலப்பு இனத்தை சேர்க்காமல், நாட்டு வகை அல்லது மலபார் புளியை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம்.
மேலும் படிக்க | Skin Care Routine: முகப்பொலிவு வேணுமா? ரோஸ் வாட்டர இப்படி யூஸ் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ