நெல்லிக்காய் அருமருந்து என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அரு நெல்லியைவிட தோப்பு நெல்லி எனும் உருண்டையாக இருக்கும் கருநெல்லி மிகவும் சக்தி வாய்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லி மரத்தின் இலை, பட்டை. வேர், காய், பழம், காய்ந்த பழம்,  பூ, வேர்பட்டை, விதை என அனைத்தும்  பயன்படுகின்றன. கருநெல்லியில் மாவுச் சத்து, புரத சத்து, கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், இரும்புச்சத்து,  வைட்டமின் பி1, வைட்டமின் சி என பல சத்துக்கள் உள்ளன. 


வைட்டமின் சி-யின் மிகச் சிறந்த மூலத்தைக் கொண்டுள்ள நெல்லிக்காயில் இருக்கும் விட்டமின் சியின் அளவு எவ்வளவு தெரியுமா? 


முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து ஒரு நெல்லிக்காயில் உள்ளது.


மேலும் படிக்க | தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்


நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.


மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பது ஆயுர்வேத மருத்துவ.  ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுத்தால் சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 



நெல்லிக்காயின் விதையைப் பொடியாக்கி அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து அருந்தினால்,  பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் குறையும். நெல்லிக்கனியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உணவினை நன்கு செரிக்க உதவுகின்றன. 


மேலும் படிக்க  | காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


தினம் ஒரு நெல்லிக்காயை தொடர்ந்து உண்டால், அது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இளமையை பராமரிக்கவும் உதவும். ஒரு தேக்கரண்டி நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.


சுலபமாக கிடைப்பதால் நெல்லி என்ற அற்புத கனியின் (Healthy food) அருமை பெருமை தெரிவதில்லை என்பது மருத்துவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயம். நெல்லிக்காயின் அருமை தெரிந்தவர்களும் அருநெல்லியை தவற விடுவது வருத்தம் தரும் செய்தி. 


நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்,  சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் மிகவும் சிறந்தது. மலமிளக்கியாக செயல்படும் அருநெல்லி, மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட நோய்களுக்கு (Medicinal Benefits) அருமருந்தாகிறது.


உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும். அழகுக்கு அழகூட்டும் நெல்லிக்காய், தலைமுடி வளரவும் உதவும். நெல்லித்தைலம் தலைமுடிக்கு மிகவும் நல்லது.


மேலும் படிக்க | பச்சை கொத்தமல்லியில் இவ்வளவு மருத்துவ குணங்களா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR