வெங்காயத்தை அடுத்து தக்காளியின் விலை 70% உயர்ந்தது!!
வெங்காயத்தை அடுத்து தக்காளி விலை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: நாட்டில் பெய்த மழையின் காரணமாக அதிகரித்த வெங்காயம் (Onion) விலையால் நாட்டு மக்களை கண்ணீர் விட வைத்தது. ஆனால் இப்போது விலையின் தாக்கம் தக்காளி (Tomato) பக்கம் திரும்பி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் நாட்டின் தலைநகரான டெல்லியில் தக்காளியின் விலை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் தக்காளி விலை சிவப்பாக மாறியுள்ளதால் மக்கள் வருத்தப்படுகிறார்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியா மாநிலங்களில் பெய்த கனமழையால், வெங்காய விநியோகம் தடைபட்டதால், அதன் விலை கடுமையாக அதிகரித்தது. இப்போது தக்காளியின் விளையும் அதிகரித்துள்ளது. டெல்லி என்.சி.ஆர் (Delhi NCR) பகுதிகளில் தக்காளி கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில் ரூ. 40-60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால் சமையலறை பட்ஜெட் மோசமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். முதல் 30 ரூபாயில் ஒரு கிலோ தக்காளி கிடைத்த இடத்தில், இப்போது அதற்கு இரட்டிப்பு பணத்தை செலவிட வேண்டடிய நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் வருத்தத்தில் உள்ளனர். டெல்லி மட்டுமல்ல, நாட்டிலும் பல பகுதிகளில் தக்காளி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இந்த நேரத்தில் தக்காளி பயிர்யிடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பெய்த மழையால் பயிர் கெட்டுப்போகிறது என்று விவசாயிகள் வருத்தப்பட்டு உள்ளனர். வர்த்தகர்களின் கூற்றுப்படி, வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேறியா பிறகு தக்காளியின் வருகை அதிகரிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது பண்டிகை காலங்கள் தொடங்க உள்ளதால், தக்காளியின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.