தூதுவளையின் ரகசியங்கள் என்னென்ன...
சிறிய முள் முள்ளாக இருக்க கூடிய கொடி வகை தான் தூதுவளை. இவற்றின் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். இவை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளர கூடியது. பூ, காய், இலை, தண்டு, வேர் இவையெல்லாம் மருத்துவகுணம் கொண்டுள்ளவை. தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.
இந்திய, தாய்லாந்து பாரம்பரிய மருத்துவங்களில் கைமருந்தாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைகளிலும் முட்கள் அதிகம் இருக்கும். பயன்படுத்துவதற்கு முன் முட்களை அகற்றிவிட வேண்டும்.
Solanum trilobatum ஆங்கில் பெயர்
# ஈழை நோய்க்கு (ஆஸ்துமா) இருப்பவர்கள் தூதுவளையின் இலையை உணவில் எடுத்துக்கொள்ளுவது நல்லது.
# மார்புச்சளியைக் குணப்படுத்தத் தூதுவளை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
# வேர் முதல் பழம் வரை எல்லா பாகங்களும் வீட்டு மருத்துவ மற்றும் சித்த மருத்துவத்திற்கு பெரிதும் உதவுகிறது.
# கீரையை காய வைத்து அதனை பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிடும் மார்பு சளியை குணபடுத்துகிறது.
# இலைகளை நிலக்காய்ச்சலில் காய வைத்துப் பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து அதனுடன் கருப்பட்டி வெல்லத்தை கலந்து குடிக்கும் சளி, இருமல், குறைந்து விடும் ,
# குழந்தைகளுக்கு நுண்கிருமிகளை போக்கவல்லது இந்த தூதுவளை.
# நோய் எதிர்ப்பு சக்தி உடையது தூதுவளை.
# காலையில் எழுந்தவுடன் சிலருக்கு குமட்டல், வாந்தி, பசியின்மை இருக்கும் தூதுவளை சட்டினி, ஜீஸ், நல்லது.
# சளியால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் : கண்கள் சிவந்து போதல், காய்ச்சல், உடல்வலி போன்றவை தூதுவளை நல்லது.
# சாதாரணமாக வரும் சளி நாளடைவில் சுவாச நாளங்களில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட சளி கெட்டியாகி நுரையீரலில் ஒவ்வாமை, மூச்சுமுட்டல், ஈழை நோய்க்கு, தூதுவளை நல்ல மருந்து.