நரை முடிக்கு இந்த 2 பொருட்கள் தான் தேர்வு, இயற்கையாகவே கருப்பாகிவிடும்
White Hair Remedy: முடியை கருமையாக்க மக்கள் ஹேர் கலர் டையை பயன்படுத்துகின்றனர். இயற்கையான வீட்டு வைத்தியம் மூலமும் முடியை கருப்பாக்கலாம்.
நரை முடிக்கு இதுதான் நிரந்தரத் தீர்வு: வயது ஏற ஏற மனிதர்களின் தலைமுடியும் வெள்ளையாக மாறத் (White Hair Remedy) தொடங்கிவிடுகிறது, ஆனால் பல சமயங்களில் இளைஞர்களிடமும் இந்த நரை முடிப் பிரச்சனை காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இளம் வயதினர் மிகவும் சங்கடத்தை சந்திக்க நெரிடுகிறது. எனவே தங்களின் முடியை கருமையாக்க, மக்கள் பல்வேறு ஹேர் கலர் டையை பயன்படுத்துகிறார்கள், இருப்பினும் சரியான பலன் கிடைப்பதில்லை, மாறாக இதைப் பயன்படுத்துவதால் முடிக்கு சேதம் தான் ஏற்படுகிறது. எனவே முடியை கருமையாக்குவதற்கான இயற்கையான வீட்டு வைத்தியம் (Home Remedy For White Hair Problem) பற்றி இன்று நாம் காண உள்ளோம். இந்த வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதன் மூலம் முடியை எளிதில் கருப்பாக்கலாம்.
இளம் வயதிலேயே நரை முடி ஏற்பட என்ன காரணம்?
பொதுவாக வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன. மோசமான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. வெள்ளை முடிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை வெள்ளை முடிக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, உங்கள் தலைமுடி நரையாக மாறியிருந்தால், இந்த டிப்ஸ் கட்டாயன் உங்களுக்கு பலன் தரும்.
மேலும் படிக்க | தொப்பையை 10 நாளில் பாதியாக குறைக்கும் பிளாங்க் பயிற்சி... எளிதாக செய்யும் முறை..!
முடியை கருமையாக்க இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும் (Home Remedy For White Hair Problem)
பிளாக் டீ
பிளாக் டீயில் டானின் நிறைந்துள்ளது. டானின் முடியை இயற்கையாகவே கருப்பாக வைத்திருக்க உதவுகிறது. தேயிலை இலைகளைப் பயன்படுத்தி முடியைக் கழுவுவதன் மூலம் முடியை எளிதில் கருப்பாக மாற்றலாம். இதைப் பயன்படுத்த, அதன் கஷாயத்தை ஒரு பாத்திரத்தில் தயார் செய்து, குளிர்ந்த பிறகு முடியில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு, அதன் பிறகு குளிர்ந்த நீரில் முடியை நன்கு கழுவவும்.
காபி மூலம் முடியை கருப்பாக்கலாம்
காபியில் முடியை கருமையாக்கும் இயற்கை பண்புகள் உள்ளன. காலையில் டீ மற்றும் காபிக்குப் பிறகுதான் மக்களின் தூக்கம் பெரும்பாலும் திறக்கும். முடியை கருமையாக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதற்கு இரண்டி ஸ்பூன் காபியை எடுத்து ஒரு பாத்திரத்தில் கலந்து தலைமுடியில் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த தண்ணீரில் தலைமுடியை நன்கு கழுவவும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி இயற்கையாகவே கருப்பாக மாறும்.
நரை முடி பிரச்சனைக்கு ஆயுர்வேத மூலிகைகளையும் பயன்படுத்தலாம்
இந்த அனைத்து வைத்தியங்களையும் தவிர, நீங்கள் விரும்பினால், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது, இது முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ