உஷார் மக்களே! மாரடைப்புக்கு முன் ஏற்படும் மாற்றங்கள்
மாரடைப்புக்கு முன்பு ஏற்படும் ஒருசில அறிகுறிகளை மக்கள் புறக்கணிக்கக்கூடாது.
நாட்டில் நான்கு பேரில் மூன்று பேருக்கு மாரடைப்பு பிரச்சனை இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் அடிப்படையாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான மக்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கூட அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை.
இதய தசைகள் சரியான நேரத்தில் வேலை செய்யவில்லை என்றால், நிச்சயம் பெரிய பிரச்சனை ஏற்படலாம். எனவே, மாரடைப்புக்கு முன் நம் உடல் என்ன வகையான சமிக்ஞைகளை வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதனை புறக்கணிக்கக்கூடாது.
மேலும் படிக்க | இதய நோயின் தீவிர அறிகுறிகள் - அலட்சியமாக இருக்காதீர்கள்
மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள்
மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். மார்பு அசௌகரியம், மார்பில் கனம், மார்பு வலி, வியர்வை, மூச்சுத் திணறல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளில் அடங்கும். இது தவிர, பலருக்கு அசிடிட்டி அல்லது ஏப்பம் ஏற்படுகிறது, சிலர் இதை வாயு பிரச்சனையாக கருதுகின்றனர். மாரடைப்புக்கு முன் இதுவும் ஒரு அறிகுறி. இதனைத் தான் சைலண்ட் மாரடைப்பு என குறிப்பிடுகிறார்கள்.
எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம்(CDC) வெளியிட்டுள்ள தகவலின்படி, சோர்வு, லேசான தலைவலி, கழுத்து-தாடை மற்றும் முதுகு அசௌகரியம் அல்லது வலி ஆகியவை மாரடைப்புக்கு முன் தோன்றும் அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், அதை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் படிக்க | நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR