Signs of Liver Damage: கல்லீரல் நமது உடலின் முக்கியமான உறுப்பாகும். செரிமானத்திற்கு உதவுவதோடு, இது உடலில் உள்ள அழுக்குகளையும் நீக்குகிறது. கல்லீரல் சரியான முறையில் செயல்படவில்லை என்றால், பல கடுமையான நோய்கள் நம்மை தாக்கக்கூடும். ஆகையால், கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிக முக்கியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும். இவை கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த அறிகுறிகள் பற்றிய சரியான புரிதல் இருந்தால், கல்லீரல் மோசமாக பாதிக்கப்டுவதை நாம் தவிர்க்கலாம். கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள்


உடல் மஞ்சள் நிறமாக மாறுதல்


உடலில் மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளை கண்டால், கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதில், கண்களுக்குக் கீழே உள்ள இடம் மஞ்சளாவதுடன் சருமமும் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது.


மேலும் படிக்க | சுறுசுறுப்பான மூளை, துடிப்பான இதயம், சிக்கென்ற உடல்... தினம் 4-5 பிஸ்தா பருப்பு போதும்


வயிற்று வலி


கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால், குடல்கள் வீங்க ஆரம்பித்து விடும். இதனால் வயிற்றில் வலி ஏற்படும்.


அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர்


சிறுநீரின் நிறம் நமது ஆரோக்கியத்தைப் பற்றி பல விஷயங்களை கூறுகிறது. உங்களுக்கு அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், அது நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தவிர இது உடலில் பல நச்சுகள் இருப்பதைக் குறிக்கிறது. இது கல்லீரல் பிரச்சனையின் மிகப்பெரிய அறிகுறியாக உள்ளது.


பசியின்மை அல்லது எடை இழப்பு


கல்லீரல் பாதிப்பால், உணவு சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை, அதனால் எதையும் சாப்பிட மனமில்லாமல் போகிறது. இதனால் பசி குறைந்து, உணவு உட்கொள்வது குறைந்து  எடையும் குறையத் தொடங்குகிறது.


தோலில் அரிப்பு


தோலில் அரிப்பு ஏற்படுவதும் கல்லீரல் செயலிழப்பின் ஒரு அறிகுறியாக உள்ளது. தோலில் அரிப்பு இருந்தால், அப்ஸ்ட்ரக்டிவ் காமாலைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இது தவிர, பித்த நாளத்திலும் கற்கள் இருந்தாலும், தோலில் அரிப்பு ஏற்படும். ஆகையால் காரணமே இல்லாமல் அரிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 


சோர்வு


ஓய்வு எடுத்த பின்னரும் சரியாகாத அதிகப்படியான சோர்வு கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சேதமடைந்த கல்லீரல் உடலுக்கு ஆற்றலை வழங்க போதுமான புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய முடியாததால் இது நிகழ்கிறது.


பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | எலும்பு மெலிதல்... கண் பார்வை பாதிப்பு... சுனிதா வில்லியம்ஸின் தீவிர உடல் நல பிரச்சனைகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ