டைப்2 நீரிழிவை கட்டுப்படுத்தும் காஃபி - நாளொன்றுக்கு எவ்வளவு காஃபி குடிக்கலாம்?
காபி குடிப்பதால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், அதனை எவ்வளவு குடிக்க வேண்டும் என்ற அளவு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக பலர் காபியுடன் நாளைத் தொடங்குகிறார்கள். காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதோடு, நல்ல உணர்வையும் தருகிறது. வகை 2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற தீவிர நோய்களில் இருத்து தற்காத்துக் கொள்ள தரமான காபி குடிப்பது நன்மை பயக்கும் என்று சில ஆராய்ச்சிகள் கூட கூறியுள்ளன. காபி குடிப்பதில் அதிக நன்மை இருக்கிறது என்பதற்காக அளவுக்கதிகமாக குடிக்கக்கூடாது.
ஆரோக்கியமாக இருக்க காபி குடிக்கவும்
நிபுணர்களின் கூற்றுப்படி, சூடான காபியில் கஃபெஸ்டால் மற்றும் கஹ்வோல் எனப்படும் இயற்கை எண்ணெய்கள் உள்ளன. அவை உடலில் கொலஸ்ட்ரால் உருவாவதைக் குறைக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் வடிகட்டிய காபி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த காபியை குடிப்பதற்கு என்று சில அளவுகள் உள்ளன. ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பது எப்படி?
1 முதல் 3 கப் காபி
ஒரு கப் காபியில் 100 மில்லிகிராம் காஃபின் உள்ளது. இது உடலின் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனால் சோர்வு நீங்கும். அதே நேரத்தில், 2 கப் காபி குடிப்பது மக்களின் உடற்பயிற்சி செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இது தவிர, 3 கப் காபி குடிப்பதால், இருதய நோய் அபாயம் 12 சதவீதம் குறைகிறது.
4 முதல் 6 கப் காபி குடித்தால்
தினமும் 4 கப் காபி குடிப்பதால், மது அல்லாத நோயின் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கிறது. அதே நேரத்தில், 5 கப் காபி உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை சுமார் 29 சதவீதம் குறைக்கிறது.
மேலும் படிக்க | கீல்வாதம்: முதுமை வரும் முன்னே, மூட்டு வலி வந்துவிட்டதா, அறிகுறிகள், காரணங்கள் இதோ
அதிகமாக காபி குடிக்க வேண்டாம்
எதையும் மிகுதியாகக் கொடுப்பது ஆபத்தானது என்று கூறப்படுகிறது. காபியை அதிகமாக உட்கொண்டால், தூக்கமின்மை, அமைதியின்மை, வயிற்றுக் கோளாறு, வாந்தி, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR