கீல்வாதம்: முதுமை வரும் முன்னே, மூட்டு வலி வந்துவிட்டதா, அறிகுறிகள், காரணங்கள் இதோ

Osteoarthritis: மக்களை இந்நாட்களில் பாடாய் படுத்தும் எலும்பு தொடர்பான நோய்களில் முக்கியமானது கீல்வாதம். பொதுவாக இந்த பிரச்சனை முதுமையில் ஏற்படும். ஆனால் இப்போது அது இளைஞர்களையும் பாதிக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2022, 05:04 PM IST
  • மூட்டு வலியை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
  • கீல்வாதத்தின் அறிகுறிகளை அடையாளம் காணவும்.
  • இது போன்ற பிரச்சனைகள் இளம் வயதிலேயே வரலாம்.
கீல்வாதம்: முதுமை வரும் முன்னே, மூட்டு வலி வந்துவிட்டதா, அறிகுறிகள், காரணங்கள் இதோ title=

வயதுக்கு ஏற்ப எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவது சகஜம். ஆனால் தற்போதைய காலகட்டத்தின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், இளைஞர்களும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். 

மக்களை இந்நாட்களில் பாடாய் படுத்தும் எலும்பு தொடர்பான நோய்களில் முக்கியமானது கீல்வாதம். பொதுவாக இந்த பிரச்சனை முதுமையில் ஏற்படும். ஆனால் இப்போது அது இளைஞர்களையும் பாதிக்கிறது.

35 முதல் 40 வயதுடையவர்களும் பாதிக்கப்படுகின்றனர்

கீல்வாத நோய் 55 வயதைத் தாண்டிய பிறகுதான் பொதுவாக அதன் விளைவைக் காட்டுவது வழக்கம். ஆனால் இப்போது 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களும் இதனால் சிரமப்படுகிறார்கள். 

மனிதர்களை தற்போது பெரும் அளவில் படுத்தி வரும் இந்த நோயின் ஆதி மூலம் என்ன? இதன் எச்சரிக்கை அறிகுறியை எவ்வாறு தெரிந்துகொள்வது என இங்கே காணலாம். 

எலும்புகளின் சிதைவு நோயான கீல்வாதம், ஒருவரின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குகிறது. இந்த நோய் படிப்படியாக உங்கள் மூட்டு ஆரோக்கியத்தை குறைத்து, இயக்கத்தில் சிக்கல்களை உருவாக்குகிறது. மூட்டுபகுதியை பலவீனப்படுத்தி அதிகமான வலிக்கு வழிவகுக்கிறது. 

மனித உடலின் பொதுவான எலும்பு ஆரோக்கியம் வயதாகும் போது குறைவதால், கீல்வாதம் பெரும்பாலும் முதுமையில் ஏற்படுகிறது. எனினும் சமீப காலங்களில், இந்த கோளாறு இளைஞர்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது.

மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!

கீல்வாதம் பிரச்சனை ஏற்பட காரணம் என்ன? 

- நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது.

- கனமான பொருட்களை தூக்குவது

- மூட்டில் காயம் ஏற்பட்டால் 

- நீரிழிவு நோயின் விளைவாக 

- ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்

- தவறான வாழ்க்கை முறையின் காரணத்தல் 

- மரபணு காரணத்தால்

கீல்வாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்

- அசௌகரியம்

- வீங்கிய மூட்டுகள்

- மூட்டுகள் சிவத்தல்

- மனச்சோர்வை சமாளிக்க இயலாமை

- மூட்டுகளைச் சுற்றி நீட்சி உணர்வு

- எப்போதும் சோர்வாக உணர்தல் 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | தினமும் ஒரு வெங்காயம்: திகைக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News