World Heart Day 2022: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று 'உலக இதய தினம்' கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். நம் இதயம் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் துடித்துக் கொண்டே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நம் இதயத்தை கவனித்துக்கொள்வது அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதய நோய் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. அதன் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் குழப்பமான வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். முதலில் உங்கள் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. பிறகு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, பிறகு மாரடைப்பு வருகிறது. நமது இதயத்திற்கு சிறிதளவு கூட நல்லதல்லாத அந்த உணவுகள் எவை என்று தெரிந்து கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். 


கலப்பட காபி


கலப்பட காபியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அதில் இருக்கும் சர்க்கரையும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. காபியில் உள்ள காஃபின் மூலம் அதிக சேதம் ஏற்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. பின்னர் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.


மேலும் படிக்க | ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும் 


நூடுல்ஸ்


இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேச்சுலராக வசிப்பவர்கள் சமைக்கும் உணவாக இருக்கிறது. ஏனெனில் இது விரைவாகவும் எளிதாகவும் தயாரித்துவிடலாம். ஆனால் அதை தொடர்ந்து உட்கொள்பவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் எண்ணெய் மற்றும் சோடியத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்புக்கு காரணமாகிறது.


எண்ணெய் உணவுகள்


மிகவும் சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா இதயத்துக்கு ஆகாது. இதில் நிறைய சோடியம், டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது கரோனரி நோய்க்கு ஒருவரை உள்ளாக்குகிறது. 


பீட்ஸா


பெரும்பாலான இளைஞர்களின் முதல் தேர்வாக பீட்சா உள்ளது. ஆனால் அதில் கொழுப்பு மற்றும் சோடியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள சீஸ் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் ஆபத்தை குறைக்க விரும்பினால், பீட்சா தயாரிப்பதில் முழு கோதுமை மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும்.


சிவப்பு இறைச்சி


சிவப்பு இறைச்சியில் நிறைய கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. அத்தகைய இறைச்சியை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. புரதத்தின் தேவையை பூர்த்தி செய்தாலும், அதிகப்படியான கொழுப்பு கொலஸ்ட்ராலை அதிகரித்து மாரடைப்புக்கு காரணமாகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ