Bitter Gourd Side Effects: பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு முகம் சுருங்கத் தொடங்கும். அதன் சுவை மிகவும் கசப்பாக இருப்பதால், அதை அனைவரும் சாப்பிட மாட்டார்கள். மிகச்சிலரைத் தவிர பலருக்கு பாகற்காய் பெரிதாக பிடிப்பதில்லை. சுவையைப் புறக்கணித்துவிட்டால், இது மிகவும் சத்தான காய்கறியாகக் கருதப்படுகிறது. பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகற்காய் சாப்பிடுவதால் பல உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், அல்லது வராமல் தடுக்கலாம். எனினும் நல்ல விஷயங்களை அள்ளித்தரும் பல உணவுகளில் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. பாகற்காயும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறுகிறார். பாகற்காயை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.


யாரெல்லாம் பாகற்காய் சாப்பிடக்கூடாது? 


டைப்-1 நீரிழிவு நோயாளிகள்


டைப் 1 நீரிழிவு நோயால் (Type 1 Diabetes) பாதிக்கப்பட்டவர்கள் பாகற்காய் அல்லது பாகற்காய் சாறு சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் இது திடீரென இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். இரத்த சர்க்கரை அளவு குறைவது பலவீனத்திற்கு வழிவகுக்கும். சிலருக்கு இதனால் மயக்கமும் ஏற்படலாம்.


மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்க ஏலக்காயை இப்படி சாப்பிடுங்க


கர்ப்பிணி பெண்கள்


கர்ப்பிணிப் பெண்களும் (Pregnant Women) பாகற்காய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கருப்பையை பாதிக்கும். மேலும் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திலும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


சிறுநீரக கல் நோயாளிகள்


பாகற்காயில் ஆக்சலேட் அதிகமாக உள்ளது. ஆகையால் இதனை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் (Kidney Stones) பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்படலாம். மேலும், பாகற்காய் காரணமாக, சிறுநீரகங்களில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. ஆகையால் ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.  


பாகற்காயின் கசப்பை குறைப்பது எப்படி?


பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை குறைந்து, அதன் மூலம் அதிக பாதிப்பும் ஏர்படாமல் இருக்க வேண்டுமென்றால், அதை சரியாக சமைக்க வேண்டியது மிக அவசியமாகும். முதலில், பாகற்காயை நன்கு கழுவி அதன் விதைகளை அகற்றவும். ஏனெனில் அதன் விதைகள் மிகவும் கசப்பாக இருக்கும். வேண்டுமானால், பாகற்காய் கறி செய்யும்போது வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலமும் பாகற்காயின் கசப்பு சுவையை குறைக்க முடியும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கெட்ட கொழுப்புகள் குறையும்... இந்த 7 சட்னிகளை உணவில் சேருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ