எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்க ஏலக்காயை இப்படி சாப்பிடுங்க

Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளை தொடர்ந்து பின்பற்றினால், வயிற்று கொழுப்பைக் குறைக்கலாம். நமது தினசரி உணவில் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இதில் நமக்கு உதவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2024, 11:30 AM IST
  • உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபரா நீங்கள்?
  • அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
  • ஒரு எளிய தீர்வை இங்கே காணலாம்.
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்க ஏலக்காயை இப்படி சாப்பிடுங்க title=

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடல் எடையை குறைப்பது, குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைப்பது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. வயிற்றில் சேரும் கொழுப்பினால் பலர் அவதியில் உள்ளனர். இருப்பினும், சில எளிய, இயற்கையான வழிகளை தொடர்ந்து பின்பற்றினால், வயிற்று கொழுப்பைக் குறைக்கலாம். நமது தினசரி உணவில் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இதில் நமக்கு உதவும். அதில் ஏலக்காயும் ஒன்று.

ஏலக்காய் கொண்டு எளிதாக உங்கள் இடுப்பு கொழுப்பையும் குறைக்கலாம். ஏலக்காய் அனைத்து வீடுகளிலும் எளிதாக கிடைக்கும் ஒரு மசாலா ஆகும். இது எடை இழப்புக்கும் தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் பண்புகள் பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகின்றன. 

தட்டையான வயிற்றை பெற விரும்பும் நபர்கள், தினமும் டயட்டில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளலாம். தட்டையான வயிற்றைப் பெற, ஏலக்காயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியம். தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க ஏலக்காயை எவ்வாறு பயன்படுத்துவது என இங்கே காணலாம். 

உடல் எடையை குறைக்க ஏலக்காய்

ஏலக்காய் தேநீர்

உடல் எடையை குறைப்பதற்கோ அல்லது தொப்பை கொழுப்பை எரிப்பதற்கோ, ஏலக்காய் டீ ஒரு நல்ல, நறுமணமான தேர்வாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது. இது எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும். இதைச் செய்ய, ஏலக்காயை தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். கொழுப்பை எரிக்கும் இந்த பானத்கை தினமும் குடித்து வந்தால் வயிற்று கொழுப்பு கரையும்.

மேலும் படிக்க | கெட்ட கொழுப்புகள் குறையும்... இந்த 7 சட்னிகளை உணவில் சேருங்கள்!

ஏலக்காய் மற்றும் எலுமிச்சை நீர்

ஏலக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர் கலவை தொப்பையை குறைக்க சிறந்த வழியாகும். இதை குடிப்பதால் வளர்சிதை மாற்றமும் வலுப்பெறுகிறது. இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி, வீக்கத்தைத் தடுக்கிறது. ஏலக்காயை அரைத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சை சாற்றை பிழியவும். இந்த புத்துணர்ச்சியூட்டும் பானத்தை தினமும் காலையில் குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

ஏலக்காய் மற்றும் தேன்

தொப்பையை குறைக்க விரும்பினால், ஏலக்காய் மற்றும் தேன் இதற்கு உதவியாக இருக்கும். இது பசியை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு டீஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியை அரைத்து கலந்து கொள்ளவும். இதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இடுப்பு கொழுப்பு குறையத் தொடங்கும். 

இஞ்சி மற்றும் ஏலக்காய் டீ

இஞ்சி மற்றும் ஏலக்காய் கலவை வயிற்று கொழுப்பை குறைக்க உதவுகின்றது. தேநீரில் நசுக்கிய இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பின் இதனை வடிகட்டி குடிக்கவும். இப்படி தினமும் குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு படிப்படியாக குறையும்.

நமது தினசரி சமையலில் பல உணவுகளில் ஏலக்காய் பயன்படுத்தலாம். இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நுரையீரல் அழுக்குகளை சுத்தம் செய்வது எப்படி? சரியான ஜூஸ் குடிச்சா போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News