பீர்க்கங்காய் நல்லது தான்.. ஆனால் இவங்க கட்டாயம் சாப்பிடக்கூடாது

Ridge Gourd Disadvantages: பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், ஆனால் சில சமயங்களில் இந்த காய் சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே எந்தெந்த நபர்கள் பீர்க்கங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
Ridge Gourd Disadvantages: பீர்க்கங்காய் ஒரு பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காய்கறியாகும், இது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பீர்க்கங்காயில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த காய்கறி சுவையாக இருபாதுடன், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள காய்கறியாக கருதப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு பீர்க்கங்காய் சாப்பிடுவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இந்த நபர்கள் பீர்க்கங்காயை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்நிலையில் பீர்க்கங்காய் சாப்பிடுவதை எந்தெந்த நபர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
பீர்க்கங்காய் எந்தெந்த நபர்கள் சாப்பிடக்கூடாது? | Who Should Not Consume Ridge Gourd Vegetable?
1. அலர்ஜி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள்
சிலருக்கு பீர்க்கங்காய் (Ridge Gourd) அல்லது அதனுடன் தொடர்புடைய தாவரங்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகைய நபர்களுக்கு பீர்க்கங்காய் சாப்பிட்ட உடனே அரிப்பு, வீக்கம், சிவப்பு சொறி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படத் தோன்றும். ஆகையால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2. வயிற்றில் பிரச்சனை உள்ளவர்கள்
பீர்க்கங்காய் நார்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், இது பொதுவாக செரிமான அமைப்புக்கு நல்லது என்றாலும். சிலருக்கு, அதிகப்படியான நார்ச்சத்து நுகர்வு வாயு, வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், செரிமான அமைப்பு உணர்திறன் கொண்டவர்கள், குறைந்த அளவில் பீர்க்கங்காய் சாப்பிடுவது சிறந்த தேர்வாகும்.
மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
3. கர்ப்பிணி பெண்கள்
பீர்க்கங்காயில் அதிக சத்துக்கள் இருந்தாலும், கர்ப்பிணிகள் அதிக அளவில் பீர்க்கங்காய் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதற்குக் காரணம், சில சமயங்களில் பீர்க்கங்காய் கசப்புத்தன்மையைக் கொண்டிருக்கலாம், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்.
4. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்
பீர்க்கங்காயில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும், ஏனெனில் அத்தகையவர்களுக்கு சிறுநீரகங்கள் பொட்டாசியத்தை சரியாக வடிகட்ட முடியாமல் போகலாம். எனவே, சிறுநீரக நோயாளிகள் பீர்க்கங்காயை உட்கொள்வதற்கு முன் தங்களின் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.
5. ஆக்சலேட் உணர்திறன்
சிலருக்கு ஆக்சலேட் உணர்திறன் இருக்கும். பீர்க்கங்காயில் ஆக்சலேட் உள்ளடக்கம் உள்ளது, இது சிலருக்கு சிறுநீரக கற்கள் அல்லது பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆக்சலேட் உணர்திறன் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறியாக இருக்கலாம், ஆனால் சில சூழ்நிலைகளில் அதை சாப்பிடுவது உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ளதைப் படி உங்களுக்கும் இது போன்ற ஏதேனும் பிரச்சனை இருந்தால் பீர்க்கங்காய் சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக உங்களது மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ