கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது இந்த அறிகுறிகள் தோலில் தோன்றும்

High Cholesterol: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பெரும்பாலானோர் சிரமப்படுகின்றனர். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது தோலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எனவே, இதுபோனற்ற சூழ்நிலையில் நாம் நமது உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறித்து தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், தோலில் சில அறிகுறிகள் தோன்றும், அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. எனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது தோலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது இந்த அறிகுறிகள் தோலில் தோன்றும்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, தோலில் சில அடையாளங்கள் தோன்றும். உங்கள் தோலில் ஆரஞ்சு, மஞ்சள் நிற அடையாளங்களைக் கண்டால், அவற்றை மறந்து கூட புறக்கணிக்காதீர்கள், உடனடியாக உங்கள் கொலஸ்ட்ரால் அளவைச் சரிபார்க்கவும். ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். அதேபோல் கால்கள், கைகள் மற்றும் வேறு சில இடங்களிலும் இந்த அடையாளங்களை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், இது இதய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
மேலும் படிக்க | Cervical Pain: கழுத்து வலியில் இருந்து விடுபட சில எளிய பயிற்சிகள்!
மேலும் படிக்க | தேடி வரும் நோயை விரட்டியடிக்கும் 3 உணவுகள்
கண்களுக்கு மேல் மஞ்சள் சொறி
கண்களுக்கு மேல் மஞ்சள் சொறி போல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். ஏனெனில் இது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது இது நிகழலாம். மறுபுறம், கண்களில் மஞ்சள் நிற சொறி இருப்பதும் நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
கைகள் மற்றும் கால்களின் தோலில் வலி உணர்வு
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, கைகள் மற்றும் கால்களின் தோலில் கூச்ச உணர்வு ஏற்படும். கால்கள் மற்றும் கைகளின் தோலில் ஏற்படும் வலி கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்களும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டால், கண்டிப்பாக உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ